கருணாநிதியை இழிவாக விமர்சித்த பாஜக தலைவர்!

7 மாநில முதல்வர்களை அழைத்து திமுக தலைவர் கருணாநிதிக்கு வைர விழாவை திமுக நடத்த இருக்கும் நிலையில் பாஜக தலைவர்களுள் ஒருவரான கல்யாண் ராமன் என்பவர் கருணாநிதி பற்றி தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்துள்ளார்.

 
1957-ம் ஆண்டு குளித்தலை தொகுதியில் துவங்கி இப்போது திருவாரூர் தொகுதிவரை 13 முறை தோல்வியடையாமல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராகி 60 ஆண்டுகள் ஆகின்றன. இதை வைர விழாவாகவும், அவரது பிறந்த நாளையும் இணைத்து ஜூன் 3-ஆம் தேதி பிரமாண்ட விழாவாக நடத்துகிறது திமுக.
இந்த விழாவுக்கு பாஜகவையும் அழைக்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை கோரிக்கை விடுத்த நிலையில், ”திராவிட இயக்கத்தை கூண்டோடு அழிப்போம் என்று கூறுகிறவர்களை அழைத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பவில்லை” என்று ஸ்டாலினும் பதில் சொல்லி விட்ட நிலையில், விழாவுக்கு அழைக்காதது தொடர்பாக பாஜக தலைவர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

 
இந்த ஆத்திரத்தில் நிதானமிழந்து கருணாநிதி பற்றிய தரக்குறைவான தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் பாஜகவினர்.
பாஜக பிரமுகரும் ஆர்.எஸ். எஸ்.அமைப்பில் பணியாற்றும் கல்யாண் ராமன் என்பவர் கருணாநிதி பற்றி அடித்திருக்கும் கமெண்ட் ரொம்பவே உசுப்பேற்றியிருக்கிறது திமுகவினரை.

 

கல்யாண்ராமனின் இந்தக் கருத்துதான் பாஜகவின் கருத்தா என்பதுதான் நாம் கேட்க விரும்பும் கேள்வி!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*