ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகள் வேட்பாளராக மகாத்மா பேரன்!

வலுவான ஆளும் கட்சியாக மத்தியில் உள்ள பாஜக நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. உத்திரபிரதேசம், கோவா உள்ளிட்ட நான்கு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் மாநிலங்களவையில் மட்டுமே பாஜக செல்வாக்கில்லாமல் இருந்தது.
நான்கு மாநிலங்களில் வென்றிருக்கும் நிலையில் மாநிலங்களவையிலும் பாஜக பலம் பெற்று விடும் என்பதால் அது கைகாட்டும் வேட்பாளரே ஜனாதிபதி தேர்தலில் வெல்வார் என்னும் நிலையில் எதிர்க்கட்சிகள் மகாத்மா காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலையோடு முடிவடைகிறது. பாஜக வலுவாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியோடு மம்தா பானர்ஜி உட்பட 9 கட்சிகள் இணையும் எனத் தெரிகிறது.
இது பற்றி கோபால கிருஷ்ண காந்தி “ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக நான் நிறுத்தபடுவதற்காக பேசப்பட்டு வருவது உண்மைதான். ஆனால் இவை அனைத்துமே ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தையாக நடந்து வருகிறது” என்றார்.
கோபால கிருஷ்ண காந்தி 2004 முதல் 2009 வரை மேற்கு வங்க கவர்னராக பதவி வகித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியவர். பல நாடுகளில் இந்திய தூதராக அவர் பணியாற்றி உள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*