தந்தை செல்வா போராட்ட வரலாறு உருவாக்கம் : தியாகு (பாகம் -2)

முதல் பாகம் 

அந்த வகையில் செல்வநாயகம் அவர்களுடைய சொந்த வாழ்க்கை என்பது அவருடைய பிறப்பும் வளர்ப்பும் அவரது குடும்ப வாழ்வும் அவரது அரசியல் வாழ்க்கையை கவனிப்பதற்கு முன் தேவைப்படுகிறது. அந்த முறையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றிய குறிப்புகளை நாம் பார்த்தோம். அவர் பட்டப்படிப்பு முடித்து சென்தாமஸ் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிய தொடங்கிய போதே தனது சகோதரர் மரணமடைகிற நிலையிலிருந்த எட்வேட் இராஜசுந்தரத்தை பார்க்க விடுப்பு கேட்டார் என்றும் அந்த விடுப்பை வழங்க அப்போதைய கல்லூரியின் காப்பாளர் வில்லியம் ஆர்கஸ்ரேன் மறுத்தபோது அவர் பதவிவிலகி சென்றதாக ஒருகுறிப்பு காணப்படுகிறது.

 

பின்பு அவர் கொழும்பில் வெஸ்னி கல்லூரியில் சேர்ந்து அறிவியல் ஆசிரியராக பணியாற்றினார் இந்த காலத்தில் தான் அவர் சிலோன் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று 1923 இல் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆனார். குறிப்பாக உரிமையியல் சட்டத்தில் வல்லவராக இருந்தார் “கல்ஸ்டோர்பில்” சட்டத்தொழில் புரிந்தார் 1947 இல் மே 31 ஆம் நாள் கின் கவுன்சில் என்ற உயர்ந்த பட்டம் அவருக்கு தரப்பட்டது. இதுதான் முற்காலத்திலும் இன்றைக்குமாக கின் கவுன்சிலாக அழைக்கப்படுகிறது. செல்வநாயகத்திற்கு இருமுறை உச்சநீதிமன்றத்திற்கு ஜோன் கஸ்துரு ஹோவான் நீதிபதியாக இடமளிக்க முன்வந்தார் ஆனால் செல்வநாயகம் அதனை ஏற்றுக்கொள்ளளவில்லை. அந்த நேரத்தில் செல்வநாயகம் பாலகோடாவின் பெற்றிக்கெல்டா எஸ்ரட் எனும் தோட்டத்தில் ஒரு பங்கினை வாங்கினார் அவருக்கு ஒரு அச்சகமும் சொந்தமாக இருந்தது அது லாபகரமாக நடத்தப்படவில்லை என்றாலும் அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுவதாக இருந்தது.

 

இது செல்வநாயகத்தினுடைய சொந்த வாழ்க்கையினுடைய சில குறிப்புகள் இவை. இதிலிருந்து அவருடைய அரசியல் பணிகுறித்து அறிந்துகொள்ள முற்படலாம் இளம் வழக்கறிஞராக இருந்த போதே செல்வநாயகத்திற்கு அரசியலில் ஈடுபாடு இருந்தது. 1944 இல் சிலோன் என்று அன்று அழைக்கப்பட்ட இலங்கை தீவு நாட்டிற்கான அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக சோல்பரி ஆணையம் அமைக்கப்பட்டது அந்த நேரத்தில் அவரும் மற்றைய முன்னணி தமிழர் தலைவர்களும் சேர்ந்து அனைத்து இலங்கை தமிழர் காங்கிரஸ் என்ற அமைப்பை நிறுவினார்கள். தமிழர்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதே இந்த அமைப்பினது நோக்கமாக இருந்தது. இதனுடைய தலைவராக விளங்கியவர் ஜி. ஜி பொன்னம்பலம். இவர் தலைமையேற்ற இந்த அமைப்பில் அவருக்கு உதவித் தலைவராக பணியாற்றினார். பொன்னம்பலம் தலைமையில் சோல்பரி ஆணையத்திடம் சென்ற தூதுக்குழுவின் ஒருபகுதியாக செல்வநாயகமும் அதில் ஒரு உறுப்பினராக சென்றார். இவர்கள் நாடாளுமன்றத்தில் சம பிரதிநிதிதிதுவம் வேண்டும் என்பதற்காக வாதிட்டார்கள் சிங்களவர்களுக்கு 50 சதவிகித இடங்களும் மற்ற இனக்குழுக்கள் அனைவருக்கும் சேர்த்து 50 சதவிகித இடங்களும் வேண்டும் என்பது பொன்னம்பலம் தலைமையில் சென்ற குழுவின் வாதமாக இருந்தது.

 

 

1947 இல் அதாவது இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு அல்லது அதிகார கைமாற்றதம் பெறுவதற்கு முன்பே நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இலங்கை தமிழர் காங்கிரசினுடைய வேட்பாளராக செல்வநாயகம் காங்கேசன்துறையில் போட்டியிட்டார். காங்கேசன்துறையிலேயே இவர் பலதடவை அடுத்தடுத்து போட்டியிட்டார். கடைசிவரையிலும் இந்த தொகுதியிலேயே போட்டியிட்டுக்கொண்டிருந்தார். தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார் 1948 பெப்ரவரியில் சுதந்திரம் பெற்றதற்கு பின்பு இலங்கையில் சிங்களவர்கள் ஆதிக்கத்திலான அரசாங்கம் தோன்றியது. இந்த இடத்தில் நாம் ஒன்றை குறிப்பிட்டு சொல்லவேண்டும் ஒரு கட்டத்தில் இலங்கையினுடைய டொனமூர் ஆணையத்தின் மூலமாக ஒரு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அது வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பதை நடைமுறைப்படுத்தியது உண்மையில் ஒரு நாட்டில் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது ஒரு முற்போக்கான மாற்றம் வரம்புக்கு உட்படுத்தப்பட்ட வாக்குரிமைக்கு பதிலாக உடைமையாளர்களுக்கு மட்டும் வாக்குரிமை ஆண்களுக்கு மட்டு;ம் வாக்குரிமை அல்லது பட்டதாரிகளுக்கு மட்டும் வாக்குரிமை படித்தவர்களுக்கு மட்டும் வாக்குரிமை என்றெல்லாம் வாக்குரிமை வரலாற்றில் பலகட்டங்களில் பலவிதமாக வரம்பிற்கு உட்படுத்தப்பட்தாகவே இருந்திருக்கிறது.

 

 

பிரிட்டனில் தோன்றிய மகாசாசன் இயக்கத்தினுடைய கோரிக்கைகளில் ஒன்றாக பெண்களுக்கு வாக்குரிமை என்பது இருந்தது அதேபோலத்தான் உலகளவில் பெண்கள் நாள் கொண்டாடப்பட்டபோது வாக்குரிமை கேட்டு போராடினார்கள் அப்படி இருக்கிறபோது ஒரு காளணிநாட்டில் பிரிட்டனுடைய குடியேற்ற நாட்டில் அது காளணியாக இருக்கிறபோதே வயது வந்தோர் வாக்குரிமை என்ற சீர்திருத்தம் நுழைக்கப்பட்ட இடம் இலங்கை மட்டும் தான். இந்தியாவில் கூட 47 வரைக்கும் 46 இல் நடைபெற்ற சென்றல் பார்லிமன்றுக்கான தேர்தலில் கூட வயது வந்தோர் வாக்குரிமை இல்லை. அப்படி இந்த வயதுவந்தோர் வாக்குரிமை கொண்டுவந்த போது தமிழர்கள் தலைவராக மதிக்கக்கூடிய இன்னும் சிங்களவர்களுக்கும் சேர்த்து தலைவராக விளங்கிய பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் டொனமூர் தமிழ்நோமூர் என கூறியதாக குறிப்பு இருக்கிறது. வயது வந்தோர் வாக்குரிமை என்றாலே அது பெரும்பான்மையினரின் ஆதிக்கத்திற்கு இட்டுச்செல்லும் எனவே சிங்கள பெரும்பான்மையினருக்கு வாய்ப்பு வழங்குவதாக இருக்குமே தவிர அது தமிழர்களுக்கு வாய்ப்பை மறுப்பதாகவே இருக்கும் என்பதை ஒரு தொலைநோக்கு பார்வையோடு அன்று அவர் கூறியிருக்கிறார்.
இன்றுவரையிலும் இலங்கையினுடைய இனச்சிக்கலுக்கு அடிப்படையாக இருப்பது அதுதான். ஒட்டுமொத்த இலங்கையும் ஒரே தேசமாக மதிக்கப்படுகிறபோது பெரும்பான்மையாக இருக்கிற சிங்களவர்களின் ஆதிக்கம் இயல்பாகவே வந்துவிடுகிறது. எல்லோர் ஜனநாயக சீர்திருத்தமும் இரண்டு தேசிய இனங்களை கொண்ட தீவு நாடு இரண்டு தேசிய இனங்களுக்குமிடையே சமத்துவம் என்ற அடிப்படையில் நோக்கப்படுகிற போதுதான் தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதாகவும் சிங்களவர்களின் உரிமையை ஏற்பதாக அமையுமேயே தவிர அனைத்து இலங்கைக்குமான சீர்திருத்தங்கள் எத்தகைய சீர்திருத்தங்கள் எத்தகைய ஜனநாயக சீர்திருத்தங்கள் வாக்குரிமை சீர்திருத்தங்கள் ஆட்சிமுறை சீர்திருத்தங்களாக இருந்தாலும் அது சிங்கள ஆதிக்கத்திற்கு ஒரு தீர்வாகாது என்பதுதான் உண்மை. இதை நேரடியாகவே 1948 இல் செல்வநாயகமும் அவரது தோழர்களும் உணர்ந்தார்கள்.

 

அதிலும் குறிப்பாக ஆட்சிக்கு வந்த உடனடியாகவே ஐக்கியதேசிய கட்சி அரசாங்கம் தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டத்தை இயற்றியது. 1948 பெப்ரவரி 4ஆம் திகதி அன்று சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கை தீவு பிரித்தானிய காளணி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு பிரித்தானிய காப்பரசாக மாறிய நாள் அதுதான் இன்றுவரையில் இலங்கையின் சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. 48 பெப்ரவரி 4 அன்று பெற்ற சுதந்திரம் என்பது உண்மையில் சிங்களவர்களின் ஆதிக்கத்திலான ஆட்சியின் பிறப்பு நாளாக கருதப்பட வேண்டும். அன்றைய ஐக்கிய தேசியகட்சி அரசாங்கம் என்பது சிங்கள ஆதிக்கத்திலான ஒரு அரசாங்கத்தை குறிக்கும் இந்த அரசாங்கம் அதே 48 ஆகஸ்ட் 20 ஆம் நாள் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்தது. இது சிலோன் குடியுரிமை சட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தியாவின் தமிழகத்தில் இருந்தும் வேறு சில பகுதிகளிலிருந்தும் இலங்கையின் மலையகப்பகுதிகளில் தோட்டத்தொழில் செய்வதற்காக தமிழர்கள் ஒப்பந்த கூலிகளாக கொண்டுசெல்லப்பட்டார்கள். 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு ஒப்பந்த கூலிகளாக சென்றவர்கள் தான் காடு திருத்தி களணியாக்குவது என்ற முறையில் அந்த பகுதிகளில் தேயிலை காப்பி இறப்பர் உருவாவதற்கு காரணமாக இருந்தார்கள்.

 

இவர்கள் நடந்து சென்ற வழியிலேயே நோய்வாய்பட்டு இறந்ததுவும் உண்டு என்று அந்த மக்களைப்பற்றி இலக்கியத்தில் பாரதியார் பதிவு செய்திருக்கிறார். அவ்வாறு ஒப்பந்த கூலிகளாய் சென்ற தமிழர்களைத்தான் தமிழில் சாதி என்ற கவிதை எழுதினார் “என்செய்ய நினைத்தாய் என்தமிழர் சாதியை எனக்குரையாயோ” என்று கேட்டார். அப்படிப்பட்ட துயரத்திற்கு ஆளான அந்த தமிழ் மக்கள் தோட்டத் தொழிலாளர்களாக குடியமர்ந்துவிட்டார்கள் சிங்களவர்கள் தராத உழைப்பினை அந்த மண்ணுக்கு தந்தவர்கள் அந்த தமிழர்கள். இலங்கையினுடைய பெரும்பகுதியான அந்நிய செலவாணியை ஈட்டித்தருகிற தேயிலை என்பது தமிழர்களின் இரத்தத்தில் இருந்து உருவானது ஒன்று. அந்த தேயிலைத்தோட்ட தொழிலாழர்களாக குடியேறிய அந்த மக்கள் அவர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டு இதன்காரணமாக வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அதிகாரத்தில் அவர்களுக்கு எந்த பங்கும் இல்லாமல் ஆக்கப்படுவதற்கு வழிவகுத்த சட்டம் தான் 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இலங்கை குடியுரிமை சட்டமாகும்.

தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*