மகிந்தவைச் சந்தித்தார் மோடி!

எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் இலங்கை சென்றுள்ள மோடி எதிர்ப்பே இல்லாமல் கொழும்பு சென்ற மோடி!  நேற்று இரவு முன்னாள் அதிருபரும் போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்படுகிறவருமான மகிந்த ராஜபக்சேவை சந்தித்துள்ளார்.

இலங்கை வரும் இந்திய பிரதமரை சந்திக்கும் விருப்பத்தை ராஜபக்சே இந்திய தூதரகத்தின் மூலம் வெளிப்படுத்தியிருந்த நிலையில் இச்சந்திப்பு கொழும்பில் நடந்துள்ளது. இந்தச் சந்திப்பின் போது  இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்திக் கொள்ள விரும்புவதாக மோடி தெரிவித்ததாக மகிந்த தெரிவித்துள்ளார்.

எனினும், கடந்த மே 1-ஆம் தேதி தொழிலாளர் தின விழாவில் மகிந்த தலைமையில் நடந்த தொழிலாளர் பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு பேரணி நடத்தியதையும் அங்கு காணப்பட்ட எழுச்சியும் மீண்டும் மகிந்தவின் அரசியல் எழுச்சியை உணர்த்துவதாக அரசியல் அவதானிகள் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

இப்போது பதவியில் இருக்கும் மைத்ரி பால சிறிசேனாவும், ரணில் விக்கிரமசிங்கேவுக்கும் இந்தியாவின் நேரடி ஆதரவு இருந்த நிலையில், நாளை என்ன மாற்றங்கள் வேண்டுமென்றாலும் நடக்கலாம். என்பதால்  மகிந்தவையும் சந்தித்து வைப்போம் என்றே இச்சந்திப்பு நடந்ததாக தெரிகிறது.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*