முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

இலங்கை இராணுவத்தினரால் அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் உச்சக்கட்டம் 2009 மே மாதம் நடந்தேறியதன் நினைவு நாள் எதிர்வரும் 18.05.2017 அன்று நடைபெறவிருப்பதை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரமாக 12.05.2017 ஆரம்பித்துள்ளது. அந்த நினைவேந்தல் நிகழ்வின் தொடக்க நிகழ்வு செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நினைவுதின அனுஷ்டிப்பில் மாகாண சபை உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன் மற்றும் வடமாகாண எதிர்க் கட்சித் தலைவர் தவராசா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களையும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் சுடரேற்றி வழிபட்டு முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் செம்மணியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*