காஷ்மீர் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்!

ஜனநாயக வழியில் அரசியல் போராட்டம் நடத்தும் காஷ்மீர் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
காஷ்மீர் பகுதியைப் பொருத்தவரை அஹிம்சை வழியில் மக்களைத் திரட்டி காஷ்மீருக்கு சுயாட்சி கோரும் தலைவர்கள், தேர்தல் அரசியலில் பங்கேற்கும் தலைவர்கள், ஜிகாதிகள், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அடிப்படைவாதக் குழுக்கள் என பலவிதமான குழுக்கள் காஷ்மீருக்காக போராடுகின்றன.
ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் வேறுபட்ட கொள்கைகளும்  சுதந்திர காஷ்மீரை அடைவதற்கான வழிமுறைகளையும் கொண்டிருக்கின்றன.  பாகிஸ்தான் ஆதரவோடு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் போன்ற ஆயுத குழுக்கள் இயங்கி வருகின்றன.
ஆனால் சைய்த் அலி ஷா கிலானி, மிர்வாஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் போன்றவர்கள் ஜனநாயக வழிகளில் போராடுகிறார்கள். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசோ காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சிகளை மட்டுமே  பேசும் தரப்பாக ஏற்றுக் கொண்டு பேசி வரும் நிலையில் மற்ற குழுக்களை ஏற்றுக் கொள்வதில்லை, இந்நிலையில்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்காக ஜனநாயக வழியில் போராடும் தலைவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
காஷ்மீரில் இஸ்லாமிய அரசு என்பதற்கு மாறாக ‘அரசியல் போராட்டம்’ என்றால் உங்களுடைய தலையை வெட்டிவிடுவோம் என பிரிவினைவாதிகளுக்கு ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க மூத்த தலைவர்  கீர் மூசா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் வெளியிட்டு உள்ள வீடியோவில்கா “காஷ்மீரில்  இஸ்லாமிக் அரசை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் பாதையில் தடையை ஏற்படுத்தினால் அவர்களுடைய (பிரிவினைவாதிகள்) தலையை துண்டித்துவிடோம் என மிரட்டிஉள்ளது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம். துண்டிக்கப்படும் பிரிவினைவாதிகளின் தலையானது லால் சவுக் தொங்கவிடுவோம் எனவும் மிரட்டிஉள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*