+2 தேர்வு முடிவுகள்: ஒரே நாளில் 8 பேர் தற்கொலை: 5 பேர் ஐ.சி.யூ.வில்!

நேற்று (12-05-2017) அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. மாணவர்களுக்கு இடையில் எழும் போட்டி பொறாமைகளை தவிர்க்கவும், பின் தங்கிய மாணவர்களுக்கு எழும் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும் ரேங்க் சிஸ்டம் இனி இடம் பெறாத என அறிவித்தது தமிழக அரசு.
இது நாமக்கல் போன்ற இடங்களில் உள்ள கோழிப்பண்ணை பிராய்லர் பள்ளிகளுக்கு ஓரளவு நெருக்கடியை உருவாக்கினால் பின் தங்கிய குடும்பச் சூழல், பொருளாதாரச் சூழல், என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கல்வி கற்க வரும் மாணவர்களுக்குள் என்ன பின் விளைவை உருவாக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதுவரை 8 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி தற்கொலை செய்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவிகள்.

1 – சென்னை வளசரவாக்கம் கிரேசில்லா
வர்க்கீஸ் என்பவர் மகள் கிரேசில்லா பிளஸ் டூ தேர்வு எழுதினார். தேர்வில் வென்ற போதும் எதிர்பார்த்த மதிப்பெண் இல்லை என்பதால் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கிறார் கிரேசில்லா.

 

2 திண்டுக்கல் பிரபா தேவி
திண்டுக்கல் ஆத்தூர் அருகே உள்ள போடிக்காமன் வாடி கூலித்தொழிலாளி சண்முகம் மகள் பிரபாவதி தேர்வில் தோல்வியடந்தார். கூலித்தொழிலாளி சண்முகம் மகளை திட்டவில்லை மாறாக ஆறுதலாக பேசினாலும் சமூகம், பள்ளிக்கூடம் இவர்களால் அடையப்போகும் அவமானத்திற்கு அஞ்சி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

3 திருப்பூர் நிவேதா

திருப்பூர் வெள்ளக்கோவில் சக்திவேல் மகள் நிவேதிதா தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மங்கலம் பாளையத்தில் இருக்கும் தன் தாத்தா வீட்டிற்குச் சென்ற நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் தேர்வு முடிவில் தோல்வியடைந்திருந்தார் நிவேதிதா.

4 கடலூர் கிருஷ்ணபிரியா
கடலூர், மா. கொந்தங்குடி கிராமத்தின் கூலியான சங்கர் என்பவரது மகள் கிருஷ்ணபிரியா தமிழ் பாடத்தில் தோல்வியடைந்ததால் தீக்குளித்து இறந்தார்.

5 தர்மபுரி ரம்யா
தர்மபுரி குமாரசாமிப் பேட்டை ஆறுமுகம் என்பவர் மகள் ரம்யா தேர்வில் தோல்வியடைந்தால் தனிமையில் இருந்தவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
6 பெரம்பலூர் பிரதீபா
பெரம்பலூர், குன்னம் அருகே உள்ள கோவில் பாளையம் பிரகாஷ் மகள் பிரதீபா 790 மதிப்பெண்கள் எடுத்து பிளஸ் டூ தேர்வில் தேர்வான போதும், மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்தார். சக தோழிகள் பெற்ற அதிக மதிப்பெண்கள் அவமானத்தை உருவாக்க விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
7 ராமநாதபுரம் சரத்குமார்
ராமநாதபுரம் மத்தியரேந்தல் பகுதியைச் சேர்ந்த பெரிய சாமி மகன் சரத்குமார் அங்குள்ள அரசுப்பள்ளியில் படித்து வந்தார். தேர்வு சரியாக எழுதவில்லை என்ற மன உளைச்சலில் இருந்தவர் தேர்வு முடிவுகளுக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
8கிருமாம்பாக்கம் மணிகண்டன்
குறைவான மதிப்பெண் எடுத்து விடுவோம் என்ற அச்சத்தில் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு கடந்த 9-ஆம் தேதியே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் நேற்று வெளியான தேர்வு முடிவில் மணிகண்டன் பெற்ற மதிப்பெண்களோ 1095. அவர் படித்த பள்ளியில் நான்காவது மதிப்பெண்ணை பெற்றிருக்கிறார் மணி.

5 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில்
வெளியில் தெரிந்து 8 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடும் நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சுமார் 5 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
விழுப்புரம் ஆனாங்கூர் கிராமத்தில் ஒரு மாணவியும் வளவனூரில் ஒரு மாணவியும் விஷம் குடித்து இப்போது விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திண்டிவனம் வடசிறுவலூரை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்தார். அவர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் மாணவி ஒருவரும், கன்னிவாடி அருகே ஒரு மாணவியும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

இதுவரை 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், 5 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மரணமடைந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண் மாணவிகள் எனும் நிலையில், சிகிச்சை பெற்று வருகிற ஐவருமே பெண் மாணவிகள்தான்.
ஆண்டு தோறும் ஆண்களை விட பெண் மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி விகிதம் அடைகின்றனர். என்று ஊடகங்கள் வெளிச்சமிடும் நிலையில் மதிப்பெண்களின் பெயரால் சமூகமும், குடும்பமும் சுமத்தும் மான அவமானம் எனும் போதைக்கு பலியாவதும் பெண் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்.
இதில் காவல்துறையால் பதியப்பட்ட மரணங்களே வெளியில் வருகின்றன. ஆனால் வெளித்தெரியாமல் புதைக்கப்படும் புதைக்கப்படும் மரணங்களும் இருக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*