ஜெயலலிதா என்னை தமிழக அரசின் நண்பன் என கூறினார் : வெங்கய்யா நாயுடு

மெட்ரோ ரயில் சேவையினை தொடங்கி வைக்கும் விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு,  ஜெயலலிதா என்னை தமிழக அரசின் நண்பனென கூறினார் என்று பேசினார்.

சென்னையின் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. நகரங்களில் வாகன நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. மெட்ரோ என்ற சொல் பாரீஸ் மெட்ரோலிட்டன் என்னும் வார்த்தையில் இருந்து உருவானது. இந்தியாவில் முதன் முதலாக 1984-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. கொல்கத்தாவில் தொடங்கிய மெட்ரோ ரயில் சேவை தற்போது 8 நகரங்களில் செயல்படுகிறது. சென்னையில் முதல் முறையாக இன்று சுரங்க பாதை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இச்சேவையினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

அதன்பிறகு விழாவில் வெங்கய்யா நாயுடு பேசுகையில், கட்சிக்கு அப்பாற்பட்டு நான் மிகவும் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஜெயலலிதா.  ஜெயலலிதாவை இந்த தருணத்தில் நினைவுகூர்கிறேன். விழாவில் ஜெயலலிதா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. சுரங்க ரெயில் பாதையில் அனைத்து பாதுக்காப்பு வசதிகளும் உள்ளன. ஜெயலலிதாவின் கோரிக்கையின் பேரில் மெட்ரோ திட்டம் விரிவு படுத்தப்பட்டது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை என்ற ஜெயலலிதாவின் கனவு நனவாகி உள்ளது. ஜெயலலிதா தலைமையில் தொடங்கப்பட்ட திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது. ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற பிரதமர் மோடி உதவி வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிறந்த தலைவர், நல்ல நிர்வாகி. என்னை அவர் தமிழக அரசின் நண்பன் என்று கூறியிருக்கிறார். தான் பங்கேற்ற மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில்தான் ஜெயலலிதா கடைசியாக பங்கேற்றார்.

ஸ்மார்ட் நகரங்களின் முதல் தேவை, போக்குவரத்து நெரிசலை குறப்பதே ஆகும். மெட்ரோ விரிவாக்கத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசு செய்யும். டெல்லி போன்ற நகரங்களில் மெட்ரோ ரெயிலில்தான் நான் பயணிக்கிறேன். பொதுமக்களின் போக்குவரத்தில் மெட்ரோ ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கும். கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுக்காக மக்கள் நகரங்களை நாடி வருகின்றனர். ஊரகப்பகுதியிலிருந்து நகரப்பகுதிகளுக்கு மக்கள் இடம் பெயர்கின்றனர். மக்கள் தொகை உயர்வை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அமலாக்கம். சென்னையின் மக்கள் தொகை பெருமளவு உயர்ந்து விட்டது. அனைத்து மாநிலங்களுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு விரும்புகிறது. 2-ஆம் கட்ட மெட்ரோ ரெயில் சேவைக்கும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். இது போன்ற பொதுபோக்குவரத்து திட்டங்களால் மக்களுக்கு அதிகளவில் பயன். சீர்திருத்தம்,செயல்பாடு,மாற்றம் ஆகியவையே நமது தாரக மந்திரம் ஆகும். மெட்ரோ ரயில் திட்டம் பொது போக்குவரத்து சேவையை வலுப்படுத்தும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை குறைக்கும் வகையில் போக்குவரத்து திட்டங்கள் வகுக்கப்படும். நாள்தோறும் 7.75 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும்.மெட்ரோ ரயிலுக்காக பாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். என்று அவர் பேசினார். கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மெட்ரோ ரயில் நிகழ்ச்சிக்கு பிறகுதான் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*