பணத்துக்காகதான் இதை செய்தேன்: கமல்ஹாசன்

பணத்துக்காகதான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விஜய் டி.வி.யின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார் கமல். இவ்வளவு பெரிய நடிகர், டி.வி. தொகுப்பாளராக ஆனது ஏன் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது. 
 
இது குறித்து கமலிடம் கேட்டபோது “சினிமாவைவிட தொலைக்காட்சி மூலம் அதிக மக்களைச் சென்றடைய முடியும். அதேசமயம், பணமும் எனக்கு முக்கியம். இந்த நிகழ்வில் நான் பங்கேற்றது பணத்துக்காகத்தான். படங்களிலும் காசு வாங்காமல் நடிப்பதில்லையே. மேலும் படத்தைப் போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் எனும் அவசியம் இல்லை. அதனாலேயே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிகமான மக்களிடம் நாம் சென்று சேருவதற்கான வழி மற்றும் பணம், இவையிரண்டும் ஒன்றாகக் கிடைக்கும்போது யார் தான் வேண்டாம் என்று சொல்ல முடியும்?” என்று பதில் அளித்துள்ளார் கமல்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*