முடங்கிய பழனிசாமி: இரட்டை இலையை கைப்பற்றும் பன்னீர் அணி!

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூர் சிறையிலும், துணை பொதுச் செயலாளர் திஹார் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியில் ஆளும்  பாஜக ஆதரவோடு இதுவரை 30,000 -க்கும் மேற்பட்ட பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது பன்னீர் அணி.
ஆனால் அதே நேரம் இரட்டை இலையை மீட்கும் நடவடிக்கையில் எதுவும் செய்ய முடியாமல் கை பிசைந்து நிற்கும்  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எடப்பாடி அணி. காரணம் அவசர அவசரமாக தினகரன், சசிகலா குடும்பத்தினரை அதிமுகவை விட்டு நீக்கி வைத்த நிகழ்வு.
ஆனால் அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த நிலையில், அவரை பொதுச் செயலாளராக வழி மொழிந்ததே பன்னீர்செல்வம்தான். ஆனால் அந்த பன்னீர்செல்வம் சொல்கிறார் என்று இதில் உள்ள சட்டச் சிக்கல்களை கவனத்தில் கொள்ளாமல் எடப்பாடி அணி சசிகலாவை ஒதுக்கி வைக்கும் முடிவை அறிவித்து விட்டு. இரட்டை இலையை மீட்பதற்கான  பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்ய வழியில்லாமல் திணறிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அணி.
பிரிந்த அணிகள் இரண்டும் ஒன்றிணைய பேச்சுவார்த்தை அவசியம் என்பதை  அழுத்தமாக உருவாக்கிய பன்னீர் அணி அதற்கு நிபந்தனையாக சசிகலா , தினகரன் உறவுகளை நீக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார்கள். எடப்பாடி அணியும் கொஞ்சமும் யோசிக்காமல் இருவரையும் நீக்கினார்கள். பின்னர் பேச்சுவார்த்தை சொதப்ப கூலாக  சுற்றுப்பயணம் சென்று விட்டார்  பன்னீர். இன்னொரு பக்கம் பல்லாயிரக்கணக்கான  ஆவணங்களையும் இரட்டை இலை சின்னம் கோரி தாக்கல் செய்துள்ளார்.
ஆனால் சட்ட ரீதியாக இன்னும் பொதுச்செயலாளராக சசிகலாவே தொடரும் நிலையில், எடப்பாடி அணி எதைச் சொல்லி ஆவணங்களை தாக்கல் செய்யும். தினகரன் அணியில் இருக்கும் நாஞ்சில் சம்பத் அதிமுகவின் மூன்றாவது அணியை உருவாக்க முயன்று வரும் நிலையில், கிட்டத்தட்ட இரட்டை இலை பன்னீர் செல்வத்தின் கைகளுக்குச் செல்லும் நிலைதான் இப்போதைக்கு உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*