விவசாயிகளின் கடன் தொகையும் அதானியின் கடன் தொகையும் ஒன்றுதான்!

****DO NOT DELETE: for business life Gautam Adani at his home....Gautam Adani, a tycoon and energy mogul, at home in Ahmedabad, India, May 27, 2011. In an effort to get more energy to the people of India, Adani decided to work around the infrastructure of Mundra and fully fund a new power plant using his own finances and resources. (Ruth Fremson/The New York Times)Redux / eyevine Please agree fees before use. SPECIAL RATES MAY APPLY. For further information please contact eyevine tel: +44 (0) 20 8709 8709 e-mail: info@eyevine.com www.eyevine.com

தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை ரத்து செய்ய விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் மோடி அரசு இதை கண்டும் காணாமல் இருந்து வருகிறது. கடன்களை ரத்து செய்ய முடியாது என பிடிவாதமாக மறுத்து வரும் நிலையில்,

மோடியின் நண்பரும் அவரது வெற்றிக்காக உழைத்தவருமான அதானிக்கு இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகையும்,   மொத்த இந்தியாவில் உள்ள விவசாயிகளின் கடன் தொகையும் ஒரே அளவுதான் என்பது தெரிய வந்துள்ளது.

தமிழக விவசாயிகளின் போராட்டமும் டெல்லியில் முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,  மக்களவையில் கார்ப்பரேட் கடன் குறித்து விவாதத்தை துவக்கியிருக்கிறார் ஜனதா தளம் ஒன்றிய (JD-U) தலைவர் பவன் குமார் வெர்மா.
குறிப்பாக அதானி குழுமத்தின் மொத்த கடன் தொகை, ரூபாய் எழுபத்தியிரண்டாயிரம் கோடி, இந்திய விவசாயிகளின் மொத்த கடன் தொகைக்கு இணையாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
“பி.எஸ்.யூ வங்கிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஐம்பது லட்சம் ரூபாய் கடன்பட்டிருக்கிறது. இதில்,LANCO, GVK, Suzlon Energy, Hindustan Construction Company மற்றும் சில அதானி குழு நிறுவனங்களின் கடன் தொகையே ஏறத்தாழ ரூபாய் 1.4 லட்சம் கோடியாக இருக்கிறது” என வெர்மா அவையில் தெரிவித்திருக்கிறார்.
“அதானி குழுமத்தின் கடன் தொகை,இன்று, ரூபாய் எழுபத்தி இரண்டாயிரம் கோடியாக இருக்கிறது. நேற்று தான், விவசாயிகளின் மொத்த கடன் தொகையே ரூபாய் எழுபத்தி இரண்டாயிரம் கோடி என குறிப்பிடப்பட்டது” என இரண்டு கடனுக்கும் இடையே இருக்கும் தொடர்பை அடிக்கோடிட்டிருக்கிறார் வெர்மா.

“அதானி குழுமமே வங்கிகளுக்கு ரூபாய் எழுபத்தி இரண்டாயிரம் கோடி கொடுக்க வேண்டும். அதானிக்கோ அவருடைய குழுமத்திற்கோ கடனை திருப்பியளிக்கும் திறன் இருக்கிறதா என்பது முக்கியம் இல்லை. கடந்த இரண்டு மூன்று வருடங்களில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 85% வளர்ந்திருக்கிறது. ஆனால், பொருளாதார நிபுணர்கள் நிதி ஆண்டில், கடனுக்கு வட்டி கட்டும் திறன் பெரிய அளவில் குறைந்திருப்பதாக கூறுகிறார்கள்.
“ அதானி குழுமத்திற்கும் இந்த அரசிற்கும் என்ன உறவு எனத் தெரியவில்லை. ஆனால் பிரதமர் சென்ற இடத்தில் எல்லாம் அதானியை பார்க்க முடிகிறது. பி.எஸ்.யூ வங்கிகள் கடனை திருப்பிக் கட்ட முடியாதவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்கிறது என்பது கவனிக்க வேண்டிய கருத்து” என பேசிய வெர்மா, இது தொடர்பாக தனக்கு அரசிடம் இருந்து பதில் வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார்.
“ இது பற்றி அரசிற்கு தெரியுமா தெரியாதா என்பது குறித்து எனக்கு அரசிடம் இருந்து பதில் வேண்டும். இந்த நிறுவனத்திற்கு நம்மால் கற்பனை செய்ய முடியாத உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன” என வெர்மா கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*