சுதந்திர போராட்டத்தில் சிரஞ்சீவி?

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, அரசியலிலும் கலக்கி வருகிறார். சினிமாவில் சிறு இடைவேளைக்குப் பின் அவர் நடித்த ‘கைதி எண் 150’ படத்தைக் கொண்டாடி வருகிறார்கள் அவருடைய ரசிகர்கள். தமிழில் விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கித்தில் வெளிவந்த ‘கத்தி’ படத்தின் ரீமேக் அது. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார் சிரஞ்சீவி. 
 
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றினை படமாக்கப் போகிறார்கள். சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அவருடைய வரலாற்றை, மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தில் நடிக்கிறாராம் சிரஞ்சீவி. அது மட்டுமின்றி, அரசியல் ரீதியாகவும் தனக்கு இந்தப் படம் கை கொடுக்கும் என்று நினைக்கிறாராம்.மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்தை, சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரிக்கிறார். அரசியல் மற்றும் சினிமா என இரு தளங்களிலும் தனது ரசிகர்களை கவர இந்தப் படம் “ஒரு கல்லில் இரண்டு மாங்காய்” என்பது போல  அமைந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*