தோல்வியில் முடிந்த ரஜினி போட்டோ ஷூட்! லைவ் ரிப்போர்ட்!

ரஜினி ரசிகர்களுடன் போட்டோ எடுக்கப் போகிறார் கட்டுக்கடங்காத கூட்டம் திரளும் என்று உளவுத்துறை கொடுத்த தகவலையடுத்து போக்குவரத்தை சரி செய்ய சாலையோரங்களில் போட்டிருந்த பேரிகாடுகளை எல்லால் நேற்று இரவே கொண்டு வந்து சென்னை கோடம்பாக்கத்தில் இருக்கும் ரஜினிகாந்த் மண்டபத்திற்கு வெளியே போட்டு வைத்து விட்டது போலீஸ்.
மண்டபத்தின் இரு பக்கங்களிலும் சவுக்கு கட்டைகளால் நீண்ட வரிசையில் தொண்டர்கள் வருவதற்காக கட்டப்பட்டிருந்தது. இன்று காலை 8.30 மணிக்கு சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்திற்குள் ஊடகங்களை அனுமதித்தார்கள்.
அரங்கினுள் ஆயிரக்கணக்கில் தமிழகம் முழுக்க இருந்து வந்திருந்த தொண்டர்களிடம் ரஜினி பேசி முடித்த பின்னர் அங்கிருந்த ஊடகங்களை ரஜினியின் ஆட்கள் வெளியேற்றி விட்டார்கள்.
காலை 10 மணியளவில் போட்டோ ஷூட் துவங்கிய போதே மைக்கில் “அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி” என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல அரங்கிற்குள் இருந்தவர்களில் சரிபாதி பேர் போட்டோ எடுக்க முடியாமல் வெளியேற , ராகவேந்திரா மண்டபம் இருக்கும் சாலையோ ஈ ஆடியது.
எதிர்பார்த்தது போல கூட்டமும் இல்லை தொண்டர்களிடம் ஆரவாரமும் இல்லை. லட்ச்சக்கணக்கில் வருவார்கள் என்று எதிர்பார்த்து சில ஆயிரம் பேர் வந்து. அதிலும் சில நூறு பேருடன் கூட போட்டோ எடுத்துக் கொள்ளாத ரஜினி 12 மணிக்கு மண்டபத்தில் இருந்து கிளம்பிச் சென்றார்.


இரண்டு மணி நேரத்தில் சில பிரபலங்களே ரஜினியுடன் போட்டொ எடுத்துக் கொள்வதில் நேரம் ஓடி விட தொண்டர்கள் சிலர்தான் ரஜினியுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடிந்தது.
ராகவேந்திரா மண்டபம் இருக்கும் அரங்கிற்கு வெளியே ஏகப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மொத்த போஸ்டர்களும் ஒரு சில ரசிகர் மன்றங்களால் ஒட்டப்பட்டவையே தவிற பரவலாக அல்ல.
ராகவேந்திரா மண்டபத்துக்கு வெளியே ஸ்கூட்டரில் வந்து போட்டோ எடுக்க முடியாமல் திரும்பிக் கொண்டிருந்த ஒரு தொண்டரிடம் பேசிய போது “ நான் போட்டோ எடுக்க வந்தேன். ஐந்து நாள் தலைவர் போட்டோ எடுப்பார் என்றார்கள். காலை எப்போ இருந்து எடுப்பார் என்று சொல்லவில்லை. மதியம் 12 மணியோடு இன்னைக்கு போட்டோ முடிஞ்சு போனதா சொல்றாங்க. தவிறவும் ஆதார் அட்டை, ரசிகர் மன்ற அட்டை இருக்கணும்ங்கிறாங்க நான் முன்னாடி ரசிகர் மன்றத்துல இருந்தேன். அவர் அடிக்கடி அரசியலுக்கு வருவேன், வரமாட்டேணு சொன்னதால போராடிச்சுப் போய் அடையாள அட்டையை எங்கேயோ தொலைத்து விட்டேன். இப்போ தீடீர்ணு அடையாள அட்டை வேண்டுமென்றால் என்ன பண்றது” என்று கேட்டு விட்டு சலிப்போடு அந்த இடத்தில் இருந்து நகர்ந்தார்.
ரசிகர்களை விட பேரிகாட்டுகளின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் சாலையின் இரு மருங்கையும் ஆக்ரமித்திருக்கும் பேரிகாடுகள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடைஞ்சலை உண்டாக்கியிருப்பதைத் தவிற வேறு எதுவும் நடக்கவில்லை.
ரஜினியின் முதல் நாள் போட்டோ ஷூட் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் எஞ்சியிருக்கும் நான்கு நாள் போட்டோ ஷூட்டும் எப்படி நடக்கப் போகிறது என எதிர்பார்ப்பில் உள்ளார்கள் ரஜினியின் ரசிகர்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*