அவர்கள் என்னை முடக்க நினைக்கிறார்கள்: ப.சிதம்பரம்

முன்னாள் காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீடுகளில் இன்று அதிகாலை முதல் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர். வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் முதலீட்டு ஒப்புதலில் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பா.சிதம்பரம், நிதி அமைச்சராக இருந்த நேரத்தில் ஏர்செல்-மேக்சிஸ் என்ற நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்குவதில் இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் சிதம்பரத்தோடு தொடர்புடைய 14 இடங்களில் சி.பி.ஜ சோதனை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் தனது மகன் மற்றும் நண்பர்களின் வீட்டை சி.பி.ஐ குறி வைத்திருப்பது தவறான செயல் என அரசாங்கத்தை சாடியுள்ளார். மேலும் அவர், “நான் ஆளும் கட்சியையும் அதை சார்ந்தவர்களையும் எதிர்த்து பேசுவது, எழுதுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதை தடுக்கவே இந்த செயலை செய்துள்ளனர். அவர்கள் என்ன செய்தாலும் நான் பேசுவதையும் எழுதுவதையும் நிறுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் ஐந்து செயலாளர்கள் இருக்கிறோம். இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்ட ஒப்புதல்களை வழங்கியிருக்கிறோம். அவர்கள் மீதோ என் மீதோ எந்த குற்றச்சாட்டும் எழுந்ததில்லை. ஒவ்வொரு விசயத்திலும் சட்ட திட்டத்தின்படியே ஒப்புதல் வழங்கினோம் என சிதம்பரம் கூறுகிறார். அமலாக்கத்துறை இந்த வழக்கை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், வெளிநாட்டு முதலீடு 3,500 கோடி என தெரிகிறது. அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் திட்டப்படி, 600 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படும்போது பொருளாதார விவகாரங்கள் தொடர்பான மந்திரி சபைக்கே அதன் பொறுப்பு சேரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*