ரெய்ட் எதிர்பார்த்த ஒன்றுதான் : சுப்பிரமணியன் சுவாமி!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீடுகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மும்பை நொய்டாவில் உள்ள சிதம்பரம் வீடு உள்ளிட்ட 14 இடங்களில் இந்த ரெய்டு நடந்து வருகிறது.

 
முன்னாள் காங்கிரஸ் அமைச்சரவையில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது அன்னிய முதலீடுகளை ஈர்க்க முறைகேடான வழிகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.
இது குறித்து பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியதாவது:-
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சிபிஐ சோதனை எதிர்ப்பார்க்கப்பட்டது தான். அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திற்கு ப.சிதம்பரம் முறைகேடாக பல்வேறு ஒப்புதல்களை வழங்கியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*