அதிமுக இணைய ஜெயக்குமாரும், சீனிவாசனும்தான் தடைக்கற்களா?

பிளவு பட்ட அதிமுக அணிகள் இணைய நிதியமைச்சர் ஜெயக்குமாரும், திண்டுக்கல் சீனிவாசனும் தடைக் கற்களாக உள்ளார்கள் என்று பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் குற்றம் சுமத்தி உள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பிளவு பட்ட அதிமுக பன்னீர் செல்வம் தலைமையிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் பிளவு பட்டி நிற்கிறது இந்த அணிகள் இணைய பெரும் தடையாக இருந்தது. பன்னீர் அணி விதித்த நிபந்தனைகளே.
முக்கியமான அமைச்சுப் பதவிகளைக் கேட்டது. சசிகலாவின் மொத்த குடும்பத்தையும் கட்சியிலிருந்து விலக்கக் கோரியது என பன்னீர் அணி விதித்த நிபந்தனைகள் அதிமுகவை தன் தலைமையில் கைப்பற்றும் நோக்கம் கொண்டவை என்பது அப்பட்டமாக தெரிந்தது.
மெஜாரிட்டி பெற்ற எடப்பாடி அரசை சில எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு பன்னீர் அணி மிரட்டுவதை பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
தவிறவும் பெரிய போராட்டத்தின் பின்னர் அமைச்சரவையை தலைமையேற்று நடத்தும் எடப்பாடி தன் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார்.இப்போதைய அமைச்சரவையில் செல்வாக்கு செலுத்துகிறவர்களும் இதை விரும்பாத நிலையில் பேச்சுவார்த்தை முறிந்து போனது. இந்த பேச்சுவார்த்தை நடப்பதை எடப்பாடி பழனிசாமியோ அவரோடு இருப்பவர்களோ விரும்பவில்லை என்பதுதான் உண்மை.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த மதுசூதனன் பேசுகையில், பழனிசாமி அணியினர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து காலி செய்ய பார்க்கிறார்கள். பழனிசாமி அணியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமாரை வெளியேற்றவேண்டும். இருவரும் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என குற்றம் சாட்டிஉள்ளார். தர்ம யுத்தத்தில் நாங்கள் நிச்சயம் வெல்வோம் எனவும் கூறிஉள்ளார் மதுசூதனன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*