இந்திய கிரிக்கெட் வீரர்களைக் கண்டு பயமாகவுள்ளது: டி வில்லியர்ஸ்

during the 2015 ICC Cricket World Cup match between South Africa and India at Melbourne Cricket Ground on February 22, 2015 in Melbourne, Australia.

33 வயதாகும், ஆபிரகாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ், தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் கேப்டனும் ஆவார். பல ஒருநாள் கிரிக்கெட்டில், 50,100,150 ஓவர்களில் தசம் அடித்து, தன்னை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டியுள்ளார். 360 டிகிரி என்று அழைக்கப்படும் இவர் இந்த ஐ.பி.எல் போட்டியில் அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தயாராகி வரும் அவர், இந்திய கிரிக்கெட் வீரர்களைக் கண்டு பயமாக இருக்கின்றது என்று கூறியுள்ளார். இதுகுறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் “நான் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து பயப்படுகின்றேன். ஐ.பி.எல். தொடரால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மென்மேலும் வலுவடைந்து கொண்டே வருகின்றனர். உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்கள், நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இந்திய இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்றனர். வேறு எந்த நாடுகளிலும் இது போன்று இல்லை. பிற நாடுகள் மெதுவாகவே முன்னேறி வருகின்றன. அவர்களும் இந்தியாவை எட்டிப்பிடிப்பார்கள். ஆனால், தற்போதைய நிலைமையில், இந்திய கிரிக்கெட் உச்சத்தில் இருக்கிறது. எப்போதும் சிறந்த இளம் வீரர்கள் இந்தியாவிலிருந்து வந்த வண்ணமாக உள்ளனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இத்தகைய சிறந்த வீரர்கள் கையில் உள்ளது” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*