சமச்சீர் கல்வியை நக்கலடிக்கும் ஆர்ஜே பாலாஜி

சென்னையில் வெள்ளம் வந்த வேளையில் மக்களுக்கு உதவி செய்ததற்காக ஆர்ஜே பாலாஜி தமிழக மக்களிடம் வெகுவான பாராட்டுகளை பெற்றார். அந்த பாராட்டு அவரை அத்தனை சமூக பிரச்சனைகளிலும் தலையிட சொன்னது போலும். மோடியின் பண மதிப்பிழப்பு திட்டம் அறிவிக்கப்பட்ட வேலையில் கடைநிலை ஊழியர்களின் கஷ்டம் புரியாமல், நாம் வெள்ளம் வந்த நேரத்தில் செய்ததைதான் இப்போது செய்யப்போகிறோம். ஒருவருக்கு ஒருவர் கடன் கொடுத்து உதவுங்கள் இது மோடி ஐயாவின் மகத்தான திட்டம் நம் புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்றார். ஆனால் அவரை எந்த ஏடிஎம் வாசலிலும் பார்த்ததாக ஞாபகமில்லை. அடுத்ததாக ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கிய போது மாணவர்கள் நலன் காக்கும் தலைவர் போல அறிவுரை எல்லாம் சரியாக வழங்கிவிட்டு, மீனவ நண்பர்கள் அடிவாங்கும் போது சமூக விரோதிகள் புகுந்துவிட்டார்கள் என வீடியோ வெளியிட்டார்.

தற்போது தமிழக மாணவர்களின் கல்வி முறையில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முதல் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லை என கூறியது வரை கல்வித் துறையில் ஏகப்பட்ட மாற்றங்கள். இந்த நேரத்தில் நாம் சும்மா இருப்பது தவறு என ஆர்ஜே பாலாஜியின் மனம் கொந்தளித்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக சமச்சீர் கல்வி பயிலும் மாணவர்களை ஆங்கிலம் தெரியாதவர்கள் என நக்கல் செய்யும்படி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிபிஎஸ்சி மாணவர் ஒருவரும், ஐசிஎஸ்சி மாணவர் ஒருவரும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்வதை பார்க்கும் சமச்சீர் கல்வி மாணவர்கள், டேய் அங்க பாருடா ரெண்டு ஃபாரின் காரங்க என சொல்வது போல பதிவிட்டுள்ளார்.

ஆர்ஜே பாலாஜிக்கு தமிழரசியல் சார்பான கேள்வி

தமிழகத்தில் உள்ள 90% மாணவர்கள் சமச்சீர் கல்வியில்தான் பயில்கிறார்கள். பொருளாதார வசதி அதிகம் உள்ளவர்கள் மட்டுமே சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி கல்வி முறையில் பயில்கிறார்கள். சமச்சீர் கல்வி பயிலும் மாணவர்களை ஆங்கிலம் தெரியாதவர்கள் என சித்தரிக்க உங்களிடம் என்ன தரவு இருக்கிறது?

இந்தியாவில் ஐடி தொழிலை அதிகம் ஈர்த்துள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு தனியிடம் உண்டு. சென்னை, திருச்சி, கோவை மற்றும் மதுரை என தமிழகத்தில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் பலரும் சமச்சீர் கல்வி பயின்றவர்களே. அப்படி இருக்க சமச்சீர் கல்வி பயிலும் மாணவர்களை ஆங்கிலம் தெரியாதவர்கள் என எதை வைத்து கூறுகிறீர்கள்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*