ரேன்சம்வேர் வைரஸ்: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!

A police officer stands guard in front of the Reserve Bank of India (RBI) head office in Mumbai April 17, 2012. The Reserve Bank of India cut interest rates on Tuesday for the first time in three years by an unexpectedly sharp 50 basis points to give a boost to flagging economic growth but warned that there is limited scope for further rate cuts. REUTERS/Vivek Prakash (INDIA - Tags: BUSINESS)

ரேன்சம்வேர் எனும் வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் அதன் பாதிப்பு பல மாநிலங்களில் இருக்கிறது.
ரேன்சம்வேர் வகை வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மைக்ரோசாஃப்ட் வெளியிட்டிருக்கும் புது பாதுகாப்பு பேட்சை இன்ஸ்டால் செய்யுமாறு ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஏ.டி.எம்களின் செயல்பாட்டில் எந்த தொந்தரவையும் ஏற்படுத்தாமலேயே இந்த அப்டேட்டை செய்து விடலாம் என வங்கிகளும் ஏடிஎம் ஆப்பரேட்டர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
“ எங்கள் குழுவும் பிற ஏடிம் ஆப்பரேட்டர்களும் இந்த பாதுகாப்பு பேட்ச்சை அப்டேட் செய்வதில் தீவிரமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள். இதை பதிவிறக்கம் செய்ய முடியுமா, ஆயிரக்கணக்கான ஏ டி எம்களுக்கும் இந்த 60MB ஃபைலை அனுப்ப முடியுமா என ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்” என்கிறார் ஏ.டி.எம் இயந்திரங்களை தயாரித்து நடத்தும் AGS Transact Technologies Ltd நிறுவனத்தின் தலைவர் மஹேஷ் படேல். “ எல்லாம் சரியாக நடந்து முடிந்தால், இரண்டு நாட்களில் அப்டேட் நடந்து விடும்” என்று சொல்கிறார்.
இந்தியாவில் இருக்கும் ஏ.டி.எம்கள் எல்லாம் 15 வருடம் பழைமையான விண்டோஸ் XP ஆப்ரேட்டிங் சிஸ்டமில் ஓடிக் கொண்டிருப்பவை. இதன் காரணமாக அவை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு விகிதம் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவில் மொத்தம் 2,20,200 ஏ.டி.எம் இயந்திரங்கள் இருக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*