அமிதாப் போல ரஜினி தலையிலும் ஒன்றும் இல்லை: கட்ஜூ!

தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் ரஜினி அரசுக்கு வருவாரா மாட்டாரா என்று விவாதங்கள் நடத்தும் நிலையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி முகநூலில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“தென்னிந்தியர்கள் குறித்து எனக்கு உயர்ந்த அபிப்ராயம் இருக்கிறது. ஆனால் அவர்கள் முட்டாள்தனமாக திரை நடிகர்களை தெய்வமாக்கி வழிபடுவது தான் புரிந்து கொள்ள முடியவில்லை.

1967 – 68 களில் நான் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது என்னுடைய தமிழ் நண்பர்களுடன் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் ஒன்றை பார்க்க போனது நன்றாக நினைவில் இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் சிவாஜி கணேசனின் காலை காட்டினார்கள் (காலை மட்டும் தான் காட்டினார்கள்) உடனேயே ரசிகர்கள் வெறியானார்கள்.
தற்போது தென் இந்தியர்கள் பலருக்கும் ரஜினிகாந்தை பிடித்திருக்கிறது போல இருக்கிறது. சிலருக்கு அவர் அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதல்வராக வேண்டும் எனவும் ஆசை இருக்கிறது.
ஆனால் ரஜினிகாந்திடம் என்ன இருக்கிறது ? வறுமை, வேலை வாய்ப்பின்மை , ஊட்டச்சத்து குறைபாடு, போதுமான சுகாதார சேவை இல்லாதது, விவசாயிகளின் துயரம் – இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் அவரிடம் தீர்வு இருக்கிறதா? அவரிடம் எதுவுமே இல்லை என தான் நான் நினைக்கிறேன். பிறகு ஏன் மக்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைக்கிறார்கள்? அமிதாப் பச்சனை போலவே ரஜினிகாந்திற்கும் தலையில் ஒன்றுமே இல்லை”

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*