ஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுர்கர் நினைவேந்தல்!

ஆவணப்பட இயக்குநர் சலம் பென்னுர்கர் காலமானார்

குட்டி ஜப்பானில் குழந்தைகள் எனும் ஆவணப்படத்தை இயக்கி தென் தமிழகத்தின் சிவகாசியில் கந்தக வெடி பொருள் உற்பத்தியில் குழந்தைகள் எப்படி வாழ்வை இழக்கிறார்கள். அவர்களின் கனவு எப்படி சிதைக்கப்படுகிறது என்பதை உலகிற்குச் சொன்னார். தமிழகத்தின் கல்வித்துறையில்  ஒரு பகுதி ஏழை மக்களுக்கு கல்வி உரிமையை மறுக்கும் சிவகாசி வெடி மருந்து தொழிலில் வதை படும் குழந்தை வாழ்வு பற்றிய விவாதம் தமிழகத்தின் பல துறைகளிலும் நடந்தது.

அந்த படத்தை இயக்கிய சலம் பென்னுர்கர் சமீபத்தில் மறைந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் மறுபக்கம் மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகம் அமைப்பு கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

 

திரு சலம் அவர்கள் இயக்கிய ஆவணப்படங்கள் திரையிடல் மற்றும் கலந்துரையாடல்

28 மே, ஞாயிறு மாலை 4 மணி முதல்

மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை

ஆவணப்படங்கள் :

1) All About Our Famila

2) Children of Mini Japan ( குட்டி ஜப்பானின் குழந்தைகள்)

அனைவரும் வருக!

அமைப்பு : மறுபக்கம் மற்றும் பெரியார் சுயமரியாதை ஊடகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*