எதிர்ப்பு: முல்லைத்தீவு பயணத்தை கைவிட்டார் இலங்கை அதிபர்!

Sri Lanka's newly-elected president Maithripala Sirisena gestures after being sworn in at Independence Square in Colombo on January 9, 2015. Maithripala Sirisena was sworn in as Sri Lanka's new president January 9 following a bitter election that saw the surprise ousting of strongman leader Mahinda Rajapakse after a decade in power. AFP PHOTO / ISHARA S. KODIKARA

முன்னாள் அதிபர்  ராஜபக்சே மீதான வெறுப்பின் காரணமாக மைத்ரி பால சிறிசேனாவுக்கு வாக்களித்தனர் தமிழ் மக்கள். வடக்கு, கிழக்கு தமிழர்களின் ஆதரவோடு அதிபரான  மைத்ரி அரசு தமிழகர்களின் குறைந்த பட்ச தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை.

இது அதிருப்தியாக வடக்கு பகுதி மக்களிடம்  இருந்து வந்த நிலையில், மே,18 தினத்தை இனப்படுகொலை தினமாகவும், துக்க தினமாகவும் வடக்கு பகுதி தமிழ் மக்கள்  அனுஷ்டிக்கின்றனர்.

ஆனால் அதை சீர்குலைக்கும் விதமாக முல்லைத்தீவு பயணத்திட்டத்தை  இன்று அறிவித்திருந்தார் மைத்ரி பால சிறிசேனா. வறுமை ஒழிப்பு திட்டம் எனும்  பெயரில் முல்லைத்தீவில் அரசுத் திட்ட துவக்க விழா நடைபெற இருந்த நிலையில்  வட பகுதி மக்களும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அரசு திட்டங்கள் துவக்க விழா எனும்  பெயரில் அதை கொண்டாட்ட நாளாக மாற்றக் கூடாது என்ற கோரிக்கையும் எதிர்ப்பும் மக்களின் சார்பில் வைக்கப்பட்ட நிலையில்  இன்று மேற்கொள்ள இருந்த முல்லைத்தீவு பயணத்தை ரத்து செய்துள்ளார் இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன.

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*