தெருச் சண்டை: ஜெயக்குமாருக்கு மதுசூதனன் பதில்!

பெரும்பாலான அரசியல் சண்டைகள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில்தான் நடைபெறுகிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பன்னீர் அணியும் எடப்பாடி அணியும் தெருச்சண்டை போட்டு வருகிறார்கள். ஜெயல்லைதா மறைந்த சில மாதங்களுக்கு உள்ளாகவே இந்த சண்டை துவங்கி விட்டது.

நேற்று பன்னீர் அணியில் உள்ள மதுசூதனனை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருந்த நிலையில்  பன்னீர் அணியைச் சேர்ந்த மதுசூதனன்  இன்று ஜெயக்குமாருக்கு பதில் அளித்துள்ளார்.

“அமைச்சர் ஜெயக்குமார் என்னை விமர்சித்து உள்ளார். அவருக்கு அ.தி.மு.க. கட்சியின் வரலாறு தெரியாது.ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது அவர் சிறைக்கு சென்று விடுவார், நான் முதல்-அமைச்சர் ஆகி விடுவேன் என்று கூறி தன்னுடைய சபாநாயகர் பதவியை இழந்தவர்.

அவர் சசிகலாவுக்கு கடல் நத்தையை கொடுத்து நடராஜனுடைய தயவில் மந்திரி பதவி வாங்கியவர். நாங்கள் நாள் ஒன்றுக்கு ஒரு கருத்தும், தரம் தாழ்ந்து விமர்சித்தும் வருவதாக கூறி இருக்கிறார். அவர் ஒரு அரசியல்வாதியே கிடையாது. இவ்வாறு அவர் கூறி னார்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*