எங்களை கைவிடாதேயும்: மோடியிடம் பன்னீர் மன்றாட்டு!

எந்த அரசுப்பதவியிலும் இல்லாத முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்து பேசினார்.
தமிழக விவசாயிகள் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. அது போல காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அமைச்சர்கள் நேரம் கேட்டும் அதற்கும்  நேரம் ஒதுக்கவில்லை.
ஆனால் தமிழகத்தை ஆளும் அதிமுக கட்சியையும், ஆட்சியையும் பன்னீர்செல்வத்தை  வைத்து பதம் பார்த்த பாஜக தலைமைக்கு பன்னீர்செல்வம் மீது எப்போதுமே நன்மதிப்பு இருக்கிறது.
வழக்கமாக எதிர்க்கட்சியினரை சந்திக்கும் போது சீரியஸ் முகம் காட்டும் மோடி இன்று பன்னீரை சிரித்தபடி சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கேபி முனுசாமி, மைத்ரேயன் எம்.பி, மனோஜ்பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இச்சந்திப்பின் போது சசிகலாவ நிரந்தரமாக சிறையில் வைக்க வேண்டும். தினகரன் மீதான வழக்கை மேலும் இறுக்க வேண்டும். ஆளும் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ளவர்கள் இன்னும் சசிகலா குடும்பத்தினரோடு நெருக்கமாக இருக்கிறார்கள். அவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுகவுக்கு நாங்களே தலைமையேற்க வேண்டும் அதற்கு ஆவன செய்ய வேண்டும். எடப்பாடியை விட நாங்களே உண்மையான உங்களின் விசுவாசி ஆகவே  எங்களை எச்சூழலிலும் கைவிட்டு விடக்கூடாது என்ற வேண்டுகோள்களை வைத்தனர்.
அதைக் கேட்ட பிரதமர் மோடி “நம்பிக்கையோடு இருங்கள் நல்லவை நடக்கும்” என்று அனுப்பி வைத்ததாக டெல்லி வட்டாரங்களில் தகவல்கள் கசிகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*