சம்பளத்தை உயர்த்த வேண்டும்: ஹர்பஜன்சிங்

இந்திய சர்வதேச கிரிக்கெட் அணி வீரர்களின் பழைய ஊதிய ஒப்பந்தம் அவர்களுக்கு சரிவராத நிலையில் கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த புதிய ஊதிய ஒப்பந்தத்தில் வீரர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. எனினும் இந்த புதிய ஊதிய ஒப்பந்தத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்தன. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவினரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கும்பிளே வருகிற 21 ஆம் தேதி  சந்தித்து ஊதியம் பற்றிய அறிக்கையை அளிக்க இருக்கின்றார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வரும் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், கும்பிளேவுக்கு கடிதம் எழுதி இருக்கின்றார்.

அதில், ‘உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான ஊதியம் மிகவும் குறைவாக இருக்கின்றது. இதனை வைத்து கொண்டு அவர்கள் அவர்களது குடும்பத்தை கவனிப்பது சிரமமானது. எனவே முதல் தர போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அதிகரிக்க இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டிக்கு நீங்களும் மூத்த வீரர்களும் பரிந்துரை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*