டெல்லி போலீசோடு வருகிறது புஷ்பா புயல்!

அதிமுக எம்.பி சசிகலா புஷ்பாவும் திமுக எம்.பி திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது.
இது இருவரின் தனிப்பட்ட விஷயம் என்பதால் அது பற்றி நாம் எழுத எதுவும் இல்லை.  பின்னர் திருச்சி சிவாவை விமான நிலையத்தில் வைத்து சசிகலாபுஷ்பா அறைந்தார். அது சர்ச்சையை கிளப்ப பின்னர் அதிமுகவில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார் “தன் தலைவி தன்னை தாக்கியதாக மக்களவையில் பகிரங்காக புகார் சொன்னார் சசிகலா புஷ்பா.
இந்த விவகாரங்கள்  நடந்து பல மாதங்கள் ஆன நிலையில் சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில்  உள்ளா மந்திர் கார்க் காவல்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார் சசிகலா புஷ்பா. அதில் தன் புகழை விரும்பாத சிலர் தனக்கு களங்கம் கற்பிக்கும் நோக்கோடு தன் புகைப்படங்களை வெளியிட்டதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கூறி பட்டியலையும் அளித்தார்.
அதில் சில அதிமுக பிரமுகர்கள் பெயரும் உள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் முன்னாள் பெண் அமைச்சர், எம்.எல்.ஏ. , சசிகலா புஷ்பாவின் முன்னாள் உதவியாளர், சாத்தான்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துறை தலைவர் , உள்ளிட்ட 15 அ.தி.மு.க நிர்வாகிகள்  மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அடுத்தடுத்து டெல்லி போலீசார் தமிழகத்தில் பல விசாரணைகளை நடத்தி வரும் நிலையில். சசிகலா புஷ்பா குற்றச்சாட்டு தொடர்பாக ஆளும் எடப்பாடி பழனிசாமி அரசில் இருக்கும் சிலர் கைதாகும் வாய்ப்பு உள்ளாதால்  எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இது நெருக்கடியாக மாறும்.
டெல்லி போலீஸ் இந்த விசாரணைக்காக தமிழகம் வருவதற்கும் பன்னீர்செல்வம் மோடியை சந்தித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*