முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது:தியாகு -2

TOPSHOTS A general view of the abandoned conflict zone where Tamil Tigers separatists made their last stand before their defeat by the Sri Lankan army is seen in northeastern Sri Lanka on May 23, 2009. UN Secretary-General Ban Ki-moon came face-to-face May 23 with the despair of Sri Lanka's war-hit civilians as he toured the nation's biggest refugee complex, home to 200,000 displaced by fighting. Just days after Colombo declared victory over Tamil Tiger, he toured the sprawling Menik Farm camp, 250 kilometers (155 miles) north of Colombo, which was jammed with civilians who had fled the war zone. AFP PHOTO/JOE KLAMAR

முதல் பாகம்

இந்தவகையில் பார்த்தால் டொனமூர் சீர்திருத்தமோ சோல்பரி அரசமைப்போ அல்லது 72 ஆம் வருடத்திற்குரிய குடியரசு அரசமைப்போ 78 ஆம் வருடத்திற்குரிய இரண்டாவது அரசமைப்போ குடியரசு அரசமைப்போ எதுவுமே தமிழர்களின் தேசிய இனச்சிக்கலை அங்கிகரிக்கவில்லை. திம்பு பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் தரப்பு ஒன்றுபட்டு நான்கு அடிப்படை கொள்கைகளை முன்வைத்தது.

 

இந்த நான்கு அடிப்படை கொள்கைகளில் முதலாவது தமிழர்களை ஒரு தேசிய இனமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதும் இரண்டாவதாக தமிழர்களின் தாயக பகுதிகளான வடக்கு கிழக்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் முன்றாவதாக இந்த தாயகத்தின் வருங்காலத்தை தீர்வு செய்துகொள்ளுகிற உரிமை தமிழினத்திற்கு உண்டு என்பதை ஒப்புக்கொள்வதும் நான்காவதாக இலங்கைத்தீவு நாட்டில் வெவ்வேறு  இனங்களுக்கிடையில் முழுமையான சமத்துவம் வேண்டும் என்பதும் ஆகும். இந்த கோட்பாட்டின் அடிப்படையிலான ஓர் அரசமைப்பு ஏற்படமுடியுமானால் அந்த அரசமைப்புதான் தேசிய இனச்சிக்கலுக்கு தீர்வாக அமைய முடியும். அது ஒன்றுபட்ட இலங்கையா இரண்டுபட்ட இலங்கையா என்பதை காட்டினும் முதன்மையானது இந்த தீர்ப்பு கொள்கைகளின் அடிப்படையில் தீர்வு காணப்படுகிறதா இல்லையா என்பதுதான். இதுவரையிலான எந்த அரசமைப்பும் டொனமூர் தொடங்கி ஜெயவர்த்தனா வரைக்குமான அரசமைப்புகள் எதுவும் தமிழர்களின் தேசிய இனச்சிக்கலை தீர்ப்பதில் தோல்வி கண்டுவிட்டன. அந்த தோல்வியின் ஒரு கோர விளைவுதான் முள்ளிவாய்க்கால் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மேல் தோற்றத்திற்கு அரசமைப்பு என்பது அழகான ஆசை காட்டுகிற வார்த்தைகளால் எழுதப்பட்டிருக்கலாம் ஜனநாயக உரிமைகளை எடுத்துரைப்பதாக இருக்கலாம் சித்திரவதைக்கு எதிரான சுதந்திரம் என்பதை ஓர் அடிப்படை உரிமையாக குறிப்பிடுகிற இதே அரசுஅமைப்புதான் கொடிய சித்திரவதையிலிருந்து தமிழ்மக்களை பாதுகாக்க முடியாத அரசமைப்பாகிவிட்டது. அரசமைப்பு இசைப்பிரியாவை காப்பாற்றவில்லை இந்த அரசமைப்பு நடேசனையும் புலித்தேவனையும் காப்பாற்றவில்லை. வெள்ளைக்கொடியோடு சென்று சரணடைந்தவர்களை காப்பாற்றவில்லை. பச்சிளம் பாலகன் பாலச்சந்திரனை காப்பாற்றவில்லை. இப்படி நிறையவே பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம். இன்றளவும் பாலகுமாரன் எங்கே புதுவை இரத்தினதுரை எங்கே திலகர் எங்கே யோகி எங்கே என்ற கேள்விகளுக்கு சித்திரவதையிலிருந்து சுதந்திரம் என்பதை உருதளித்திருக்கிற அரசமைப்பாலும் அரசாங்கத்தாலும் பதிலளிக்கமுடியவில்லை. அந்த வகையில் சித்திரவதையில் இருந்து சுதந்திரம் கருத்துரிமை என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரக்காயாய் இருந்துவிட்டது. கருத்துரிமைக்கு உறுதியளிக்கிற இந்த அரசமைப்பு ஆறாவது திருத்தத்தின் மூலமாக ஒரு குறிப்பிட்ட கருத்தை பறித்துக்கொண்டுவிட்டது தமிழர்களின் பெரும்விருப்பத்தை அவர்கள் முறைப்படி ஜனநநாயக முறைப்படி வெளிப்படுத்திய விருப்பத்தை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் வளியாகவும் அந்த தீர்மானத்திற்கு ஆதரவான ஜனநாயக கட்டளை வழங்கிய 77 தேர்தல் முடிவு வாயிலாகவும் உறுதிசெய்யப்பட்ட பெரு விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு வெளியிடுகிற வாய்ப்பைகூட இந்த ஆறாவது திருத்தம் மறுத்துவிட்டது. அந்த முறையில் பார்கிறபோது தமிழினத்தை ஒடுக்குகிற ஓர் அரசாக இருந்தது.
உண்மையில் இன அழிப்பு என்பது இன அடக்குமுறையிலிருந்து வந்தது இன அடக்குமுறை என்பது இன ஒடுக்குமுறையிலிருந்து வந்தது இந்த இன ஒடுக்குமுறைக்கு வளிவகுக்கிற ஓர் அரசமைப்புதான் இறுதியாக பார்க்கும்போது இனஅழிப்புக்கான சட்டஅடிப்படையாக அமைந்திருக்கிறது. பார்க்கப்போனால் சிங்களப்பேரினவாத அரசமைப்புக்கு விரோதமாக அல்ல அந்த அரசமைப்பின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகத்தான் இனஅழிப்பு நடந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். புதிய அரசமைப்பு பற்றி இப்போது ஓர் விவாதம் எழுந்திருக்கிறது தமிழீழத்துக்கான புதிய அரசமைப்பைப்பற்றி நான்குறிப்பிடவில்லை இலங்கை தீவிற்கான புதிய அரசமைப்பு பற்றி பேசப்படுகிறது. இந்த அரசமைப்புமூலம் தீர்வு காண்பதுபற்றியும் பேசப்படுகிறது. இப்போது இருக்கிற அரசமைப்பு ஒற்றையாட்சியை அடிப்படையாக கொண்டது இந்த ஒற்றையாட்சியை கழைந்து ஒரு கூட்டாட்சி அரசமைப்பை உருவாக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையை தமிழ் தலைவர்கள் வெளிப்படுத்திவருகிறார்கள் அவர்கள் சமஷ்டி தீர்வு என்று பேசிவருகிறார்கள் சமஷ்டி கூட்டாட்சி என்ற சொற்களுடைய சரியான பொருளில் அவர்கள் கூறுவது பிழையானதொன்று. கூட்டாட்சி என்பது வௌ;வேறு தேசிய இனங்கள் விரும்பி சேருவது கூட்டாட்சியாகும்.

 

இந்தியாவை கூட்டாட்சி என்று கூறலாமா? ஏன்று கேட்டபோது அம்பேஷ்கர் மறுத்தார் அமெரிக்காவில் 13 குடியரசுகள் தாமாக விரும்பி ஒரு கூட்டாட்சியை உருவாக்கின இங்கு அப்படி எதுவும் நடக்டகவில்லை பிரித்தானியர் தங்களுடைய ஆளுகை வசதிக்காக பிரிந்து கிடந்த பல்வேறு மாகாணங்களை ஒன்றுசேர்த்து இந்தியா என்று கட்டமைத்தார்கள். இலங்கையிலும் அப்படித்தான் பிரித்தானியர் கைப்பற்றுகிற காலத்தில் தமிழர்களினுடைய பகுதி தனியாக இருந்தது சிங்களவர்களுடைய பகுதி தனியாக இருந்தது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஆட்சிமுறையென்று அவற்றை ஒரேநாடாக்கினார்கள் அப்படி ஒரேநாடாக்கியதில் இருந்துதான் பெரும்பாண்மை ஆதிக்கத்திற்கான முதல்விதை விழுந்தன என்று சொல்லவேண்டும். இது பிரித்தானியர்களாலேயே மறுக்க முடியாது அந்த முதல் விதைகள் கழையப்படுவதற்கான அரசமைப்பை பிரித்தானியர்களாலேயே தரமுடியவில்லை.

 

சிங்கள ஆட்சியாளர்களால் அதை தரமுடியவில்லை இப்போது வருகிற அரசமைப்பு அடிப்படையான மாற்றத்தை வேண்டும் என்று கருதினால் அந்த விதைகளை கழைவதாக இருக்கவேண்டும். ஆனால் உண்மையில் அப்படி இல்லை நாம் ஒருபோதும் சமஷ்டியை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சிங்கள தலைவர்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்
சமஷ்டி வராது என்றால் அதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று துணிந்து பேசுவதற்கு தமிழ் தலைமைகள் அணியமாக இல்லை இந்த நிலையில்தான் தமிழர்களை பொறுத்தவரை ஒரு உண்மை மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்படுகிறது. எந்த அரசமைப்பு இனஅழிப்புக்கு வளிகோலியதோ அந்த அரசமைப்புதான் வேற்று உடைபூண்டு வரப்போகிறது வந்தால் அப்படிவரும் அல்லது வராமலே போகும் எம்மைப்பொறுத்தவரை சிங்கள அரசமைப்புக்கு தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைச்சிக்கல் தீரது என்ற படிப்பினையை இத்தனை காலம்கழித்தும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் நாம் இந்தப்போராட்டத்திலிருந்து எந்தப்பயனையும் பெறாதவர்களாகிவிடுவோம்.

 

இறந்துபோனவர்கள். இறந்துபோனவர்களின் கண்களை இருப்பவர்கள் மூடுகிறார்கள் இருப்பவர்களின் கண்களை இறந்துபோனவர்கள் திறக்கிறார்கள். நாம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்ட இனஅழிப்பில் ஒன்றரை இலட்சம் மக்களை இழந்து நிற்கிறோம் அவர்கள் எங்களுடைய கண்களை திறக்கட்டும் ஒரு உண்மையை நாம் பார்க்குமாறு செய்யட்டும் அதாவது சிங்கள அரசமைப்புக்குள் இன்று ஒன்றுபட்டிருக்கிற சிறிலங்காவின் அரசமைப்புக்குள் தமிழர்களின் துயரம் தீரப்போவதில்லை இன்னுமொரு இனஅழிப்பு கூடாது என்றால் இந்த அரசமைப்பை நாம் நிராகரிக்க வேண்டும். நமக்கான அரசமைப்பை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும். உரிமைக்கான போராட்டம் தான் உண்மையில் நீதிக்கான போராட்டம். இந்த உரிமையை அங்கீகரிக்காத சர்வதேசம் உண்மையில் இனஅழிப்பை பாதுகாக்கிற இனஅழிப்பை நியாயப்படுத்துகிற மீண்டும் ஒரு இனஅழிப்பு நிகழ்வதற்குரிய காரணிகளை கழையாத சர்வதேசம் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இது முள்ளிவாய்க்காலின் படிப்பினையாக நாம் கற்போம் தமிழர்கள் அனைவருக்கும் கற்பிப்போம் ஒரு புதிய தமிழீழத்தை மலரச்செய்வதற்கு தமிழீழத்திற்கான ஜனநாயக அரசமைப்பை உருவாக்குவதற்கு இந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*