ஆதார் அட்டை:கெடுவை நீட்டிக்க அரசு மறுப்பு!

அரசின் சமூக நலத்திட்டங்களில் பயன் பெற ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற கெடுவை ஜூன் 30-க்கு மேல் நீட்டிக்க முடியாது என  திட்டவட்டமாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் அட்டை திட்டம் கொண்டு வரப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்த மோடி பின்னர் ஆட்சிக்கு வந்ததும் ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதில் காங்கிரஸ் அரசை விட தீவிரம் காட்டினார். உச்சநீதிமன்றமே பல முறை இதைக் கண்டித்த நிலையில் சமூக நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையை பயனாளிகள் சமூக நலத்திட்டங்களோடு ஜூன் 30-க்குள் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு திடீர் உத்தரவு போட்டது.

 

இது தொடர்பான  வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது  சுப்ரீம் கோர்ட்டில்  மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறுகையில் இதை தெரிவித்தார். முகுல் ரோத்கி கூறுகையில்‘‘சமூக நலத் திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட வேண்டும். அப்போது தான் அரசின் பலன்கள் தவறானவர்களின் கைகளுக்கு சென்று சேர்வது தவிர்க்கப்படும். எனவே ஆதார் அட்டையை கட்டாயமாக்கும் திட்டத்துக்கான கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது’’ என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*