”எதற்கும் பயன்படவில்லை நானே வெட்டினேன்” -கேரள சாமியார் வாக்குமூலம்!

54 வயதான கணேஷானந்தா எனும் சாமியார் 17 வயது முதல் பள்ளிச் சிறுமி ஒருவரை பாலியல் அடிமையாக வைத்திருந்து இப்போது அப்பெண்ணால் ஆணுறுப்பு அறுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,  “ தனக்கு பிறப்புறுப்பினால் எந்த பயனும் இல்லாததால் அதை தானே வெட்டியதாக” காவல்துறையினரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

22 வயதான ஒரு பெண்ணை கடந்த ஏழு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததற்காக பாஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், கேரள காவல்துறையிடம் இவ்வாறு தெரிவித்திருக்குறார் சாமியார்.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் டீக்கடை நடத்தி வந்தவர் தற்போது கணேஷானந்தா என்றழைக்கப்படும் சாமியார். சட்டம்பி ஸ்வாமி எனும் இந்து ஆன்மீக குரு பிறந்த இடத்தை, கேரள காவல்துறையின் துணை இயக்குநர் டாக்டர் கே பி சந்தியா வாங்கிய போது அதற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி பிரபலமானவர் இவர். அவ்வேளையில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாரை சந்தித்திருக்கிறார். முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய கணவரை குணம் செய்வதாக வாக்களித்த சாமியாரை நம்பி பூஜைகள் செய்ய வீட்டிற்கு அழைத்திருக்கிறார் பெண்ணின் தாய்.

சாமியாருக்கும் அப்பெண்ணின் தாய்க்கும் இடையே நட்புடன் கலந்த பாலியல் உறவு இருந்துள்ளது.ஒரு கட்டத்தில் சாமியார் பிளஸ் டூ படித்து வந்த தனது தோழியின் மகள் மீதும் இச்சை கொண்டு, அவரை பாலியல் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கியிருக்கிறார். இதற்கு அந்த மாணவி அப்போதே எதிர்ப்பும் தெரிவித்துள்ளார் இந்த எதிர்ப்புகளை கண்டு கொள்ளாத சாமியார் தாயை எடுத்து கொண்ட உரிமையில் மகளையும் பலவந்தப்படுத்தி எடுத்திருக்கிறார்.
வேறு வழியில்லாமல் கணேஷானந்தாவின் பாலியல் இச்சைக்கு பலியான மாணவியால் இந்த தொல்லையில் இருந்து மீள முடியவில்லை.ஆனால் தாய்க்கும் தாயோடு உறவு வைத்திருக்கும் சாமியாருக்கும் சரியான பாடம் கற்றுக் கொடுக்க முடிவு செய்திருந்த அந்த இளம் பெண் அதற்கான தருணம் பார்த்து காத்திருந்தார். நேற்று வெள்ளிக்கிழமை சாமியார் இரவு வந்த போது தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டினார் அதில் 90% ஆணுறுப்பு துண்டானது.காலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தது.

சாமியாரின் ஆணுறுப்பை அறுத்தெரிந்த பெண்ணுக்கு கேரளாவில் ஆதரவு பெருகி வருகிறது.கடந்த ஏழு ஆண்டுகளாக தாயார் அனுமதியுடன் இளம் பெண் ஒருவரை பாலியல் அடிமையாக வைத்திருந்த சாமியார் ஒருவர் பிறப்புறுப்பை பாதிக்கப்பட்ட பெண் வெட்டி எறிந்துள்ள சம்பவம் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*