டிஜிட்டல்வாசி: “வைகோ பெயரை சொல்லாமல் விட்டது மனசு வேதனையாக இருக்கு”

நேத்து ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி, பல தலைவர்கள பற்றி பேசிவிட்டு தானைத்தலைவர் வைகோ பற்றி பேசாதது வருத்தம் அளிக்குதுனு வைகோ ரசிகர் ஒருத்தர் சொன்னாரு, இப்படியே போனா இன்னும் கொஞ்ச நாள்ல ரஜினிய பத்தியே யாரும் பேச மாட்டாங்க அமைதியா போயி தூங்குங்கனு அவருக்கு ஒரு டீ வாங்கி கொடுத்துட்டு வீட்டுக்கு வந்தேன்.. நீங்க டிஜிட்டல் குறிப்புகள பாருங்க

@Sathiya Kumar S
நான் பத்தாப்பு பரீட்சை எழுதயில பெண்பிள்ளையருக்கு அதிகமா அடிசனல் சீட் தேவைபடும்னு கொடுத்த பேப்பர்ல தெரிஞ்சத மட்டும் எழுதிட்டு வந்தேன்….. அப்பவே அப்டி….

@Sri Deva
ரஜினி : நான் ஒரு பச்சை தமிழன்.
சீமான் : நிருபிக்க முடியுமா ?
ரஜினி : சீமான் ஒரு போராளி..
சீமான் : எதுக்கு நிருபிக்கனும் இதைவிட என்ன ஆதாரம் வேனும்.

@Maha Lakshmi
வேலூர்க்கே காஞ்சி போய்ட்ட.. மெட்ராஸ் போனா தீஞ்சிருவ போல..
#என்னா ஒரு வெய்யிலு..

@Mohamed Salman
எலெய்.. நா பத்தாவதுல 448/500 டா.. நானும் படிக்கிற புள்ளதான்டா.. பேஸ்புக் வந்து தான்டா கெட்டு போய்ட்டேன்..

@தோணி கௌதம்
அப்பலாம் 300 வாங்குறதே இப்ப 450 வாங்குறதுக்கு சமம்டானு நான் வாங்கின 314 மார்க்கை 470 எடுத்த பையன்கிட்ட நியாயப்படுத்திட்டு இருக்கன்!

@Rajarajan RJ
கமல் புரியாத மாதிரி பேசினா, அவருக்கு ஏதோ பிரச்சனைன்னு அர்த்தம்.
ரஜினி புரியிற மாதிரி பேசினா, நமக்கு ஏதோ பிரச்சனைன்னு அர்த்தம்! #சும்மா

@Manoj B
ஆம்பூரில் மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. அழிஞ்சிகுப்பம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர்.
ஆமா இந்த மகளிர் சங்கங்கள் லாம் என்ன வேலைல பிசியா இருக்காங்கனு தெரியல… பத்து பைசா சண்டைக்கு எல்லாம் ஒண்ணா கூடி வருவாய்ங்க… இப்ப என்னத்த பண்ணுதுங்கனு தெர்ல…
– ஆணாதிக்க மனோ

@ஜாகிர்உசேன் களபம்
ஸ்டாலின்,சீமான்,திருமா ,அன்புமணி என எல்லாரையும் பாராட்டி பேசிய ரஜினி…
வைகோ பெயரை சொல்லாமல் விட்டது மனசு வேதனையாக இருக்கு…

@Santhosh Balaji Rajagopal
ரஜினியின் அரிய கண்டுபிடிப்புகள்
ஸ்டாலின் – நிர்வாகி
அன்புமணி – படிப்பாளி
திருமாவளவன் – தலித் நலன்
சீமான் – போராளி
அப்போ கலைஞர் ?

@Guru Prabhakaran
என்னை கல்யாணம் முடித்த பின் அவனுக்கு மூன்று வேலை சோறுபோட்டு கடைசி வரை அவனை கண்கலங்காமல் பாத்துப்பேன்னு சொல்ற பெண்கள் மட்டும் பெண்ணியம் பேசலாம் !!

@தோணி கௌதம்
நான் பத்தாவது படிச்சப்ப கலைஞர் ஆட்சி!
அப்பலாம் கரண்ட்டே இருக்காது அதனாலயே டென்த்ல என் மார்க் ரொம்ப கம்மியாகிடுச்சு.., இல்லணா நான் அந்த காலத்துலயே 490+ வாங்கி ஸ்கூல் ஃபர்ஸ்ட்டோ ஸ்டேட் ஃபர்ஸ்டோ வாங்கிருப்பன்!

@Sindhu Shree
நீ சொல்ற எவ்ளோ பெரிய கொடுமையான உண்மையையும் என்னால தாங்கிக்க முடியும் ஆனா நீ சொல்றது பொய்ங்கறத மட்டும் என்னால தாங்கிக்க முடியாது … 🙁

தொடரும்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*