பாஜகவுடன் கூட்டணி பற்றி வாய்திறந்த பன்னீர்செல்வம்!

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றவர் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம். அதிமுக அமைச்சரவையை வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று பன்னீரை நியமித்தது பாஜகதான்.
அவரை முதல்வராக்கியதும் பாஜகதான். ஆனால் இத்தனை நாள் மறைமுகமாக பாஜக கூட்டில் இயங்கி வந்த பன்னீர் செல்வம் அதை எப்போதும் எங்கும் மறுத்ததில்லை. ஆனால் இனியும் மறைமுகமாக ஆதரிப்பதை விட வெளிப்படையாக ஆதரிப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விட்டார் பன்னீர் என்பது முன்கூட்டியே தமிழரசியலில் எழுதியிருந்தோம்.
இந்நிலையில்,

உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசு முடிவெடுத்திருக்கிறார்கள்.டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய பின்னர் பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக டுவிட்டரில் அறிவித்திருக்கும் பன்னீர்செல்வம் “பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பின் முடிவெடுக்கப்படும்”
பாஜகவுடன் தேர்தல் கூட்டணி பற்றி வெளிப்படையாக பன்னீர் பேசியிருப்பதன் மூலம் கடந்த 2016 நவம்பர் மாதம் துவங்கி இப்போது வரை பாஜகவின் தலையீடுகள் பன்னீர்செல்வம் மூலம் தமிழக அரசியல் எப்படி தொழிற்பட்டது என்பது உறுதியாகியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*