குருநாகல் பள்ளிவாசல் மீது தாக்குதல்.

இலங்கை குருநாகல் மல்லவபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஜிம்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை (ஞாயிற்றுக்கிழமை) 3.30 மணியளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறுபான்மை இனத்தவர்கள் மீது இனவாதப்போக்குடையவர்களால் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதுடன் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டு வரும் நிலையில். (6) ஆறுபேர் கொண்ட இனம்தெரியாத குழுவொன்றினால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று பெற்றோல் குண்டுகள் தாக்குதலுக்கு பயன்படுத்தியதில் ஒரு பெற்றோல் குண்டு மாத்திரமே வெடித்து சிதறியதில் பள்ளிவாசலின் கண்ணாடிகளில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம் திருபோணமலை சம்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கிழக்குமாகாண முதல்வர் இனவாத செயல்பாடுகள் தொடர்பாக பகிரங்கமாகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் எடுத்திதுரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*