இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது: டொனால்ட் ட்ரம்ப்

US President Donald Trump (C) attends a meeting with leaders of the Gulf Cooperation Council at the King Abdulaziz Conference Center in Riyadh on May 21, 2017. / AFP PHOTO / MANDEL NGAN (Photo credit should read MANDEL NGAN/AFP/Getty Images)

“இந்தியா தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறது” என அமெரிக்க அதிபர் ரியாத்தில் நடந்த மாநாட்டில் உரையாற்றியிருக்கிறார்.
ரியாத்தில் , அரபு – இஸ்லாமிய-அமெரிக்க மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மறைமுகமாக பாகிஸ்தானை குறிப்பிட்டு, தங்கள் எல்லைகளுக்குள் தீவிரவாதிகள் இல்லை என்பதை நாடுகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்தியா, ரஷ்யா,சீனா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமான தீவிரவாத தாக்குதல்களுக்கு ஆளாகியிருக்கிறது” என இஸ்லாமிய-பெரும்பான்மை இருக்கும் 50 நாடுகளின் தலைவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார் ட்ரம்ப். பிற அரசியல் தலைவர்கள் போல பெரும் பேச்சுத்திறமை இல்லாதவர் டொனால்ட் ட்ரம்ப்.அவர் கொண்டிருக்கும் பழைமைவாத கொள்கைகளுக்காகவும், வார்த்தை பிரயோகத்திற்காகவும் பரவலாகவே விமர்சிக்கப்படுபவர் டொனால்ட் ட்ரம்ப். இந்நிலையில், மிக கவனமாக தயார் செய்யப்பட்ட இந்த உரை, இவருடைய மற்ற உரைகளிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் பிரச்சாரத்தின் போது இவர் அடிக்கடி பயன்படுத்திய “பழைமைவாத இஸ்லாமிய தீவிரவாதம்” எனும் சொற்றொடரை, ரியாத் உரையில் கேட்க முடியவில்லை. மத்திய கிழக்கு நாடுகளும் இஸ்லாமிய நாடுகளும் தீவிரவாதத்தை தோற்கடிக்க செய்ய பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

“தீவிரவாதம் உலகம் முழுதும் பரவியிருக்கிறது. ஆனால், சமாதானத்திற்கான பாதை இங்கிருந்து தொடங்குகிறது. இந்த பழைமையான நிலத்தில், இந்த புனித நிலத்தில் இருந்து தொடங்குகிறது. தீவிரவாதத்தை அழித்து அதன் தீய கொள்கையை ஒழிக்க வேண்டுமென்றால், அதற்கான பாரத்தை சுமக்க இஸ்லாமிய நாடுகள் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் உரையாற்றியிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*