இலையை மீட்க சளைக்காமல் போராடும் சசிகலா!

வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் விசாரணை முடிந்து பல மாதங்கள் கழித்து ஜெயலலிதா இறந்த பின்னர் தீர்ப்புச் சொன்ன உச்சநீதிமன்றம் சசிகலாவை குற்றவாளியாக அறிவித்த நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா பரப்பனா அக்ரஹாரா சிறையில் உள்ளார்.

 
அதிமுக பொதுச்செயலாளராக அதிகாரபூர்மாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது தேர்தல் கமிஷன்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற பன்னீர் அணி இரட்டை இலைச் சின்னம் கோரி சுமார் 31,000 மனுக்களை தாக்கல் செய்ய சசிகலா குழுவினர் கால அவகாசம் கேடிருந்தனர். இந்நிலையில் சசிகலா அணியினர் டெல்லி தேர்தல் கமிஷனில் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தனர்.
ஏற்கனவே 1991 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் சசிகலா அதிமுகவின் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விவகாரத்தில் தற்போது 12,752 பக்கங்கள் கொண்ட புதிய பிரமாணப் பத்திரம் இன்ற தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரமாணப்பத்திரத்தில் ஜெயலலிதாவால் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட அனைவரும் உட்பட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 31,000 பக்க ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ள நிர்வாகிகளில் 99% பேர் புதியவர்கள். சட்டப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இன்றளவும் சசிகலா வைத்துள்ள நிலையில். பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடியின் ஆதரவும் அதிகார பீடங்களின் ஆதரவும் உள்ளதால் பெரும்பான்மை கட்சி உறுப்பினர்களின் ஆதரவு சசிகலாவுக்கு இருந்தும் அவர் இரட்டை இலையை வெல்வாரா என்பது கேள்விக்குறியே?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*