பொறுப்பில்லாதவர்களை சந்திக்கும் மோடி:ஸ்டாலின்

மக்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக தமிழகத்தின் வெவ்வேறு தரப்பினர் மோடியைச் சந்திக்க  அனுமதி கோரியபோதும் அவர் யாரையும் சந்திக்கவில்லை. ஆனால்  பிளவு பட்டிருக்கும் அதிமுக இரு தலைவர்களையும் அடிக்கடி  சந்தித்து வருகிறார். அதே நேரம் பிரதான எதிர்க்கட்சியான திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவருமான ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்டிருந்தார் ஆனால் மோடி அவரை சந்திக்கவில்லை. இந்நிலையில் இது தொடரபாக பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார் ஸ்டாலின்.

காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் ஊராட்சிக்கு உள்பட்ட வடிவுடையம்மன் கோவில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய  ஸ்டாலின்  “ இன்று  தண்ணீர் கொடுமை தலைவிரித்தாடுகிறது. எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழகத்தை ஆளும் கட்சியாக மக்கள் நினைப்பது  திமுகவைத்தான் அந்த அளவுக்கு மக்கள் பணி செய்கிறோம்.  இரு நாட்களுக்கு முன்னர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்தார். அவர் சட்டமன்ற உறுப்பினர் வேறு எந்த பதவிகளிலும் இல்லை. அனால் அவரை அரை மணி நேரம் சந்திக்கும் பிரதமருக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லை. எதிர்க்கட்டித் தலைவர் என்ற முறையில் என்னையும் சந்திக்க விரும்பவில்லை.

விவசாயிகள் பிரச்சனைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினோம். அதில் பல தீர்மானங்களை நிறைவேற்றினோம். அதை பிரதமரிடம் வழங்க நேரம் கேட்டோம், காத்திருந்தோம் ஆனால் பிரதமர் சந்திக்கவில்லை. எந்த பொறுப்பிலும் இல்லாதவரை சந்திக்கும் பிரதமர் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவரை விவசாயிகளை சந்தித்து பேச பிரதமருக்கு மனவில்லை” என்று பேசினார்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*