ரஜினிக்கு எதிராக களமிரங்கினார் வீரலட்சுமி!

ரஜினிக்கு “போர் வரும் வரை காத்திருங்கள்” என்று சொன்னது அவரது அரசியல் வருகையை அறிவிப்பதாக பலரும் கருத்துக் கூறியிருக்கும் நிலையில், அதை எதிர்த்தும் வரவேற்றும் தலைவர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் கருத்தும் தெரிவித்து வரும்  நிலையில்  தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி.வீரலட்சுமி ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வீடு முற்றுகையிடப்படும் என  தெரிவித்துள்ளார்.

ஒருவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லி நடக்கும் இப்போராட்டம் காரணமாக ரஜினி வீடு அருகே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி கடந்த சட்டமன்ற தேர்தலில்  பம்பரம் சின்னத்தில் சென்னை பல்லாவரம் தொகுதியில்   போட்டியிட்டு 14083 வாக்குகள்  பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.ஆர். சரஸ்வதிக்கு பெரும் சவாலாக இருந்த வீர்லட்சுமி நாம் தமிழர் கட்சித்  தலைவர்  சீமானை விட அதிக வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் களத்தில் பல விதமான பரபரப்பு  போராட்டங்களை நடத்தி  கவனம் ஈர்க்கும் வீரலட்சுமியின்  ரஜினி வீடு முற்றுகை  போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*