11 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி:பழனிசாமி அரசுக்கு நெருக்கடி!

அதிமுக தலைமை பன்னீர் அணி சசிகலா அணி என்று பிளவு பட்டுள்ள  நிலையில், சசிகலா ஆதரவு அம்மா திமுகவுக்கு 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. இது  பெரும்பான்மையை விட கூடுதலாக 5 எம்.எல். ஏக்களைக் கொண்ட ஆட்சியாக உள்ள நிலையில்,

அதிமுகவை ஆதரிக்கும் அத்தனை எம்.எல்.ஏக்களுமே ஒன்றிலோ பதவி அல்லது பணம் வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.  இதனால் அம்மாவின் ஆன்மாவை ஆட்சியில் சுமக்க  ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் சமாளிக்க வேண்டியிருபப்தால் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு நாளும் முதல்வர் பதவியில் இருப்பதே பெரும் சவாலாக உள்ள நிலையில் 11 எம்.எல்.ஏக்கள் ரகசிய ஆலோசனை  நடத்தி  முதல்வரை சந்தித்து நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர்  தோப்பு வெங்கடாசலம் தலைமையில், முன்னாள் அமைச்சரும் அரவக்குறிச்சி எம்.எல்.ஏவுமான செந்தில் பலாஜி. அதிமுக எம்.எல்.ஏ பழனியப்பன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் தனி குழுவாக செயல்படுகின்றனர். இவர்கள் பல்வேறு சந்திப்புகளை  நடத்திய பின்னர்  முதல்வர் பழனிசாமி அவர்களை சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்று இன்று தலைமைச் செயலகம் வந்திருந்தார்கள்.

11 எம்.எல்.ஏக்கள் சார்பில் தோப்பு வெங்கடாசலம், செந்தில்பாலாஜி,  பழனியப்பன் ஆகியோர் தலைமைச் செயலகம் வந்து முதல்வரைச் சந்தித்து   “ கட்சியிலும் ஆட்சியிலும்   முக்கிய முடிவுகள் எடுக்கும் போது  அனைவரையும் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று கட்டையை போட்டிருக்கிறார்கள்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தையும் உடனடியாக கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்கள்.

சசிகலா சிறைக்குச் செல்லும் முன்பே செந்தில்பாலாஜி தனக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்றார். ஆனால் செங்கோட்டையனை அமைச்சர் ஆக்கிய சசிகலா செந்தில் பாலஜியை பொறுமையாக இருக்குமாறு சொன்னார்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு மேல் இனியும் இந்த ஆட்சி மீண்டும் வருமா வராதா எனும் நிலைமை உள்ள நிலையில் உடனே பதவி வாங்கி விட வேண்டும் என்ற வேகத்தில்  அதிருப்தியில் இருந்த தோப்பு  வெங்கடாசலம் அணியோடு இணைந்து பழனிசாமிக்கு நெருக்கடியை உருவாக்கி வருகிறார்கள்.

விரைவில் அதிமுக அமைச்சரவையில் மாற்றம்  இருக்கும் செந்தில்பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சர் ஆவார். ஆனால் அது அத்தனை எளிதும் அல்ல.

இப்போது அரசுக்கு உருவாகியுள்ள இந்த நெருக்கடியை தீர்க்க ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் கோட்டையில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

 

 

1 Comment

  1. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை கலைத்து விட்டு 6 மாத காலம் ஜனாதிபதி ஆட்சி நிலவ வேண்டும். இந்த மத்திய அரசு 13 மாநிலங்களுக்கு மட்டுமே சலுகை
    கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகம் மிகவும் வஞ்சிக்கபடுகிறது. உலகமே பார்த்து சிரிக்கும் அவல நிலை.

Leave a Reply

Your email address will not be published.


*