சர்ச்சைச் சாமியார் சந்திராசாமி காலமானார்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் எனப் கருதப்பட்ட சந்திராசாமி இன்று காலமானார்.

கடந்த 1991 மே 21-ஆம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீதான கருணை மனு தொடர்ந்து இந்திய அரசால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர் என கருதப்பட்ட சந்திராசாமி இன்று காலமானார். டெல்லியில் வசித்து வந்த அவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர் என ஜெயின் கமிஷனால் குறிப்பிடப்பட்டவர் இந்த சந்திராசாமி. ஆனால் கடைசி வரை அவர் விசாரிக்கப்படவே இல்லை. ராஜீவ் கொலை நடந்த அன்று சந்திராசாமி சென்னையில் இருந்தார் என்றும் கூறப்பட்டது. இவர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர் மட்டுமின்றி அவருக்கு ஆன்மீக குருவாகவும் விளங்கியவர். அதுமட்டுமின்றி இவர் உலக அளவில் நேரடியாகவும் கள்ளத்தனமாகவும் ஆயுத பேரங்களில் ஈடுபட்டு வந்தவர் என்றும் கூறப்பட்டது. மேலும் தற்போதைய பாஜக எம்.பி.சுப்பிரமணிய சாமியுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*