சென்னை சூப்பர் கிங்ஸ் ரிட்டர்ன்ஸ்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டு பத்தாம் ஆண்டை எட்டியுள்ள ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 20ஆம் தேதி நிறைவடைந்ததை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஐ.பி.எல் போட்டி தடைக்காலமும் முடிவுக்கு வந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீள் வரவேற்பு ரசிகர்களை மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சிதறிப் போய் பல அணிகளுக்கு பிரிக்கப்பட்டார்கள். அதில் சென்னை அணியின் கேப்டன் தோனி புனே அணிக்கு கேப்டனாக அல்லாமல் ஒரு வீரராக மாற்றப்பட்டார். இந்த மாற்றம் ரசிகர்களுக்கு பெரும் வருத்ததைக் கொடுத்தது. இந்நிலையில் 10ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோனி இடம்பெற்றிருந்த புனே அணி தோல்வியுற்றது. இந்தத் தோல்வி தோனியின் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை உண்டாக்கினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் வருகையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். அடுத்த வருட ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி இருப்பார். கேப்டன் தோனி தலைமையில் அடுத்த ஆண்டு 11 ஆவது ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இதையடுத்து சென்னை அணியை மீண்டும் வரவேற்கும் பட்சத்தில் ரசிகர்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விசில் போடு, எங்க தல தோனிக்கு பெரிய விசில் அடிங்க’ என பதிவிட்டு #Happy Return’s of CSK# என்ற ஹேஷ்டாக்கை டிரண்ட் செய்து வருகிறார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*