டிஜிட்டல்வாசி: “இருக்க லூசுகளே போதும்னுதான் அர்த்தம்”

ஓங்கி அடிச்சா ஒன்ர டன் வெயிட்டுனு சொன்னாப்டி, அவருக்கே பிடிவாரண்ட் கொடுத்துட்டாங்க. இனி நம்ம தமிழகத்த காப்பாத்த எந்த போலீஸால முடியும். pray for duraisingam…. நீங்க டிஜிட்டல் நோட்ஸ பாருங்க.. நான் சோகமா கிளம்புறேன்..
@Herald Saravana
ஆம்னி பஸ்சின் அப்பர் பெர்த்தில் வாழ்கிறது காதல்…

@Ka Vikram
வறண்ட பூமிக்கு
சிறு தூறலும்
பெரும் மழையே….

@Karthick Papilio Yehoshuah Muhammed
Black tea தானே கேட்டேன்!
ஏன் எனை துரத்துகிறாய்?

@Karunanidhi Arjith
புத்தகங்களை வாசிக்க இயலவில்லை உன்னை வாசித்துக்கொண்டு இருப்பதால்

@சிவ சிவா
ஒரே ஒரு பீர வச்சுகிட்டு அஞ்சு பொண்ணுங்க ரவுண்டா உக்காந்து குடிக்குறாளுக,
இப்படியிருந்தா எப்படி இந்தியா வல்லரசாகுறது?
இம்ப்ரூவ்மென்ட்டே இல்லையே பொண்ணுகளே??


@Kayalvizhi Rpk
Request அப்செப்ட் பண்ணவுடன் உடனே இன்பாக்ஸ் வந்து நன்றி னு சொல்றத எப்ப தான் நிறுத்த போறிங்க பிரண்ட்ஸ்
திருந்துங்க குச்சி மிட்டாய் குருவி ரொட்டி வாங்கி தரேன்

@Jaffar Ali
படிச்ச புள்ளைங்க கூட ஷாட் பன்னுரப்போ இடையில இடையில Ha ha ha ha lol :p
Angry
இது போல ஸ்டிக்கருங்கள அடிக்கொருக்கா ஒட்டிட்டே இருக்கனும் அப்போ தான் கரெக்ட்டா கம்பெணி தருங்கே அரை லூசுங்கே

@Bhava Dharini
இவங்க பிரபலம் ஆகணும்னு ஆசையில பிரபலங்களுக்கு ஜிங் ஜங் அடிச்சிக்கிட்டு.. அதுக்காக இவங்க கொள்கையைக் கூட விட்டுக் கொடுத்துட்டு . .. எப்டி தான் இப்படி எல்லாம் இருக்காங்களோ …

@Saya Sundaram
ஒருபோதும்
புரிந்து
கொள்ளப்படாதது
மௌனம்.

@Kartik Raj P
எரிச்சா ஒரு சொம்புல சாம்பல் கெடைக்கும்.. பொதச்சா அதுகூட கெடைக்காது..
இவ்ளோதான் ப்ரெண்ட்ஸ் வாழ்க்கை.. இருக்கற வரை யார்கூடவும் சண்டை போடாம முடிஞ்சளவு அன்பு செலுத்துவோம்

@Mani Dhanuskodi
இங்க்லீஷ் நல்லா பேசனும்னா இங்க்லீஷ் படம் நிறைய பார்க்கனும்னு சொல்லி பத்தாவது படிக்கும் போது ஃப்ரண்ட் கூட்டிட்டுப் போனான்….
அந்தப் படத்துல எல்லாம் வசனமே இல்ல……….வெறும் சண்டைதான்!

@Sathiya Kumar S
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதுனு சொல்றது… இருக்க லூசுகளே போதும்னுதான் அர்த்தம்…. மத்தபடி அவருமேல எந்த வெறுப்பும் இல்ல…

@Inaiya Monnai
சூப்பர் ஸ்டார் தன்னோட வசீகரத்தால எப்படியாவது முதல்வராகிடுவார், ஏன் பிரதமராக கூட ஆகிடுவார். ஆனா இவ்வளவு நாள் தேவுடு காத்த செயல் தலைவர் நிலைம நினைச்சாத்தான் பாவமா இருக்குது.

தொடரும்….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*