மனைவியால் அவமதிக்கப்படும் டொனால்ட் ட்ரம்ப்# video

அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் முதல் வெளிநாட்டு பயணமாக சவுதி அரபேியா சென்றார். அங்கிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு புறப்பட்டார். அந்நாட்டு தலைநகர் டெல்அவிவ் அருகே லோட் என்ற இடத்தில் உள்ள பென் குரியான் சர்வதேச விமான நிலையத்தில், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 அப்போது தனக்கு பின்னால் வந்த மனைவி மெலானியாவின் கையை பிடிக்க டிரம்ப் முயற்சிக்க, அதை மெலானியா வெடுக்கென்று தட்டி விட்ட சம்பவம் பலர் முன்னிலையில் கேமிராவில் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் பிரதம்ர் பெஞ்சமின் நேதன்யாகு தன் மனைவி சாராவுடன் கைகோர்த்தபடி சிவப்பு கம்பளத்தில் கம்பீரமாக சென்றார்.
 
இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு முன்பாக முந்தைய அமெரிக்க அதிபர்கள் யாருக்கும் இப்படி நடக்கவில்லை. ஒபாமா தனது மனையுடன் கைகோர்த்து நடந்து சென்ற காட்சிகள் பல வெளியாகி இருக்கிறது. 
 
இந்நிலையில், இஸ்ரேல் பயணத்தை முடித்து கொண்டு அங்கிருந்து டிரம்ப் தனது மனைவி உடன் ரோம் நகர் சென்றார். ரோம் விமான நிலையத்திலும் டிரம்ப் கைபிடிக்க முயன்ற போது அதனை மெலானியா ஏற்க மறுத்துவிட்டார். விமானத்தில் இருந்து இறங்கிய போது டிரம்ப் கையை பிடிக்க முயன்ற போது அதனை அவர் ஏற்கவில்லை. பின்னர் இருவரும் கீழே இறங்கி சென்றுவிட்டனர். ரோம் நகரில் போப் பிரான்ஸ்சிஸை இன்று அவர் சந்திக்க உள்ளார்.

சுலோவேனியா நாட்டு குடிமகளான மெலினா கடந்த 1996ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். பின்னர், கடந்த 2005ம் ஆண்டு தொழிலதிபரான டொனால்ட் ட்ரம்பை திருமணம் செய்துக்கொண்டார். மேலும் இவர்களுக்கிடையில் ஏற்கனவே பொதுவில் இது போன்ற சம்பவங்கள் நிறையமுறை நிகழ்ந்திருக்கின்றன  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*