ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதி!

Chennai: Tamil Nadu Chief Minister O Pannerselvam arrives to pay his last respects to political commentator Cho Ramaswamy at his residence in Chennai on Wednesday. PTI Photo (PTI12_7_2016_000269A)

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் உள்ள ஆரிய வைத்தியசாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அங்கு தங்கியிருந்து இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றுக் கொள்வார். எடப்பாடி பழனிசாமி அணியினர் டெல்லி சென்று மோடியுடன் நடத்திய சந்திப்பு பெரும் வெற்றி பெற அதனால் பன்னீர் அணி அப்செட் ஆனது.பழைய உற்சாகம் தொலைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி அணியினருடன் ஒரு பேச்சுவார்த்தைக்குச் செல்லுமாறு  பன்னீர் அணிக்கு அழுத்தம் கொடுக்கிறது பாஜக.

எடப்பாடி பழனிசாமிக்கு கீழ் ஒரு அமைச்சராக பணியாற்றும் மன நிலையில் பன்னீர் செல்வம் இல்லை. ஆனால் அதே நேரம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியையும் இப்போதைக்கு எடுக்க முடியாத நிலை இதனால் கடும் மன அழுத்ததிற்கு ஆளான பன்னீர்செல்வம் தான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*