’ஜெ’ நினைவில்லமாகிறது வேதா நிலையம்: பாஜக உத்தரவை செயல்படுத்தும் பழனிசாமி!

ஜெயலலிதா போயஸ்கார்டனில் வசித்த வேதாநிலையம் என்னும் அவருடைய இல்லத்தை நினைவில்லமாக மாற்ற  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்து அறிவிக்க இருக்கிறது.
சசிகலாவை கட்சியில், இருந்தும் ஆட்சியில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதே பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கை. துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சசிகலா குடுமபம் மோதல் வெடித்த நிலையில் அப்போதிருந்தே சசிகலாவை அதிமுகவில் இருந்து அழித்தொழிக்கும் முயற்சியை பாஜக எடுத்து வருகிறது. பன்னீர் கைகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி கைக்க்கு அரசு வந்த பின்னர் அவர்களும் சசிகலாவையும் அவரது உறவுகளையும் ஒதுக்கி வைப்பது என்ற முடிவை எடுத்தார்கள்.
இந்நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைக்க மோடியை அழைத்ததோடு, எம்.ஜி,ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தார். இது பன்னீர்செல்வம் அணியை அப்செட் ஆக்கிய நிலையில், நூற்றாண்டு விழா துவங்குவதற்கு முன்பே சசிகலா குடும்பத்தின் கையில் இருக்கும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்கி அதை நினைவில்லம் ஆக்கி விட்டால் சசிகலா குடும்பம் வீட்டில் இருந்து  வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும்.
ஒட்டு மொத்தமாக அதிமுக கட்சியில் இருந்து மட்டுமல்ல, ஜெயலலிதா எனும் பிம்பத்தை வைத்து கூட சசிகலா எதிர்காலத்தில் எதுவும் செய்ய முடியாது என்பதால் வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற முடிவெடுத்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.
ஜெயலலிதாவோடு 33 ஆண்டுகள் வேதா நிலையத்தில் வாழ்ந்த சசிகலா இப்போது பெங்களூரு பரபன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.  சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவில்லமும், பிரமாண்டமான சிலை  திறப்பு விழாவையும் ஏற்பாடு செய்து வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*