துப்பாக்கி முனையில் மணம் முடிக்கப்பட்ட உஸ்மா நாடு திரும்பினார்!

மும்முறை தலாக் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாஜக இவ்விவகாரத்தை பயன்படுத்துகிறது என்றாலும் முஸ்லீம் பெண்கள் மீதான இஸ்லாமிய சட்டங்களின் அடக்குமுறை இல்லாமல் இல்லை. மதத்தின் பெயரால் சொந்த சமூகத்தில் உள்ள பெண்கள் மீதான ஒடுக்குமுறை சமீபத்தில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில்,
பாகிஸ்தான் சென்ற டெல்லி மருத்துவர் உஸ்மா கட்டாய திருமணத்திற்கு உள்ளாகி சித்திரவதைப் பட்ட சூழலில் இருந்து விடுதலையாகி இந்தியா வந்துள்ளார்.
டெல்லி மருத்துவர் உஸ்மா (வயது 20) பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா எனும் மாகாணத்தைச் சார்ந்த தாகிர் அலி என்பவரோடு மலேஷியாவில் வைத்து காதல் வயப்பட்டார், கடந்த 1-ஆம் தேதி உஸ்மா வாகா எல்லை வழியே தாகிரைப் பார்க்க பாகிஸ்தான் சென்றார். ஆனால் அங்கு சென்றவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தாகிர் அவரை மிரட்டி திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக உஸ்மா குற்றம் சுமத்துகிறார். தாகிருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர்.
தன்னுடைய நிலை தொடர்பாக தன் சகோதரருக்குச் சொல்ல அவர் இந்திய தூதரகத்தை அணுகுமாறு கூறுகிறார். பின்னர் இந்திய தூதரகத்தி உதவியோடு இஸ்லாமாபாத் நீதிமன்றத்தை உஸ்மா அணுக நீதிமன்றம் உஸ்மாவின் விருப்பப்படி அவரை பத்திரமாக இந்தியா அனுப்பி வைக்கும் படி உத்தரவிட்டது.
வாகா எல்லையை கடந்து செல்லும் வரை அவரது பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்திரவிட்டது நீதிமன்றம். நீதிமன்ற உத்தரவுப்படி இந்தியா வந்த உஸ்மா மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து நன்றியும் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*