பாகுபலியிடம் குழந்தைகள் ஜாக்கிரதை?

பாகுபலி திரைப்படம் பல வழிகளில் 1500 கோடிகளைத் தாண்டி இன்னமும் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது முகநூலில் “பாகுபலி” ஸ்டிக்கர்கள் ட்ரென்டிங் செய்யப்பட்டு வருகிறது. இன்று காலை வெளியான பாகுபலி கதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்டிக்கர்கள் முகநூலில் பெரும் வைரலாகியுள்ளது.
 
இதேபோல் குழந்தைகளை கவர்வதற்காக பாகுபலி கேம் உருவாக்கப்பட்டு பிளே ஸ்டோரில் சில நாட்களுக்கு முன்பு விடப்பட்டது. இந்த கேமை பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் டவுண்லோடு செய்திருக்கின்றனர். இதில் சிறுவர்கள் எண்ணிக்கை அதிகம். இதனால் வளரும் குழந்தைகள் அதீத கற்பனையான விஷயங்களை கற்பனை என்ற ரீதியில் அணுகாமல் உண்மை என்கிற ரீதியில் அணுகத் தொடங்குகிறார்கள். 
 
இதே போல் பல சூப்பர் ஹீரோக்களை உண்மையானவர்கள் என நம்பி அவர்கள் போன்று செய்ய முயற்சித்து ஆபத்தில் சிக்கிய குழந்தைகளின் கதைகள் இங்கே அதிகம் உண்டு. எனவே குழந்தைகளிடையே ஒரு சில விஷயங்களை அளவுக்கு மீறி கொண்டுசெல்வது ஆபத்தில் தான் முடியும். லாபம் ஈட்டுவதற்கு குழந்தைகளை  மதியிழக்கச் செய்வது தவறு.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*