அமைச்சரவையில் மாற்றமில்லை : எடப்பாடி பழனிசாமி

அமைச்சரவையில் தற்போதைக்கு மாற்றமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார்.

சமீபகாலமாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, அவரது கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் குழுக்களாக சந்தித்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சந்திப்பில் தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று எம்.எல்.ஏக்கள் பழனிசாமியிடம் கோரிக்கை வைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள்., தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காகவே சந்தித்ததாக கூறி வந்தனர். இதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்களின் நிர்ப்பந்தத்தை அடுத்து தமிழக அமைச்சரவை விரிவாக்கப்படவிருப்பதாகவும் முதற்கட்டமாக இரு எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தங்கள் தொகுதி பிரச்சினைகளுக்காகவே எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்தனர். அமைச்சர் பதவி கோரி யாரும் வலியுறுத்தவில்லை. தற்போதைக்கு அமைச்சரவையை விரிவாக்கும் திட்டமும் இல்லை.. அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி தொடர்ந்து நடந்துவருகிறது” என்று கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*