துர்நாற்றம் அற்ற தலித்துகள் மட்டுமே அனுமதி: யோகி ஆதித்யநாத் சந்திப்பு?

யோகி ஆதித்யநாத்-ஐ சந்திக்கும் தலித் மக்கள் நறுமணமாக இருக்க வேண்டுமென உயர் அதிகாரிகள் விரும்புகின்றனர்.

உத்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆண்ட்டி ரோமியோ அமைப்பு மற்றும் பசுக் காவலர்களின் வெறிச்செயல் அதிகமாகியிருக்கிறது. இந்நிலையில் ‘முஷார்’(தீண்டத்தகாத மக்கள் என ஒதுக்கப்பட்டவர்கள்) எனும் எலி-பிடிக்கும் சமுதாயத்தை சேர்ந்த மக்களை முதல்வர் யோகி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. யோகியின் சந்திப்பை முன்னிட்டு புதிய கழிப்பிடங்கள், சாலை மேம்பாடு மற்றும் தெரு விளக்கு நடுதல் போன்ற வேலைகள் வேகமாக நடைபெற்றது. யாரும் கண்டுகொள்ளாமல் இருந்த இடத்தில் உயர் அதிகாரிகள் வந்து வேகமாக பணிபுரிவதை பார்த்த அந்த மக்களுக்கு ஆச்சரியம். அத்தனை வேலையையும் வேகமாக முடித்த அதிகாரிகள், சோப்பு, ஷாம்பு மற்றும் வாசனை திரவியங்களை வழங்கி சுத்தமாக இருக்கும்படி கூறியுள்ளனர். அதுமட்டுமல்லாது வீடுகளையும் சுத்தமாக வைத்திருக்கும்படி வலியுறுத்தியிருக்கிறார்கள். அடிப்படை வசதி இல்லாமல் ஒதுக்கப்பட்ட சமுதாயத்தில் வாழும் மக்களின் மீது அடிக்கும் வாடை யோகியை பாதிக்கும் என அந்த அதிகாரிகள் கருதியுள்ளனர். இதுகுறித்து அந்த அதிகாரிகளிடம் விசாரித்ததற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் உயர் அதிகாரிகளின் செயலை அந்த சமுதாயத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் உறுதிபடுத்தியுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஒவ்வொரு சந்திப்பும் இதுபோன்ற மட்டமான செயல்கள் நிறைந்தவை. இதேபோல இந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உயிரிழந்த இராணுவ அதிகாரி பிரேம் சாகர் குடும்பத்தாரை யோகி சந்திக்க அவர்களின் இருப்பிடத்துக்கு சென்றார். இதேபோல அந்த பகுதியிலும் வேகமாக வேலைகள் நடைபெற்றன, யோகி அந்த குடும்பத்தாரை சந்திக்கும் அறைக்கு ஏ.சி பொறுத்தப்பட்டது. ஆனால் யோகி அங்கிருந்து சென்ற சில மணி நேரங்களில் அந்த ஏ.சி-ஐ அகற்றிவிட்டனர். இதுபோன்ற மட்டமான செயல்களில் யோகியின் அதிகார கும்பல்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*