பெண்கள் போராட்டத்தை ஒடுக்க ஆண்களுக்கு இலவச மது!

திருப்பூரில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையில் குடிமகன்களை கவரும் வகையில் இலவசமாக மது விநியோகம் செய்யப்படுகின்றது. தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகள் புதிதாக திறக்கப்படவுள்ள நிலையில் இதற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் பெண்கள் பல்வேறு விதமாக போராடிவருகின்றனர். இந்த எதிர்ப்பால் புதிய மதுக் கடைகளை திறக்க முடியாமல் அரசாங்கம் திணறி வருகின்றது. இந்த நிலையில் தொழிலாளர்கள் நிறைந்திருக்கும் பகுதியான திருப்பூர் சாமளாபுரத்தில் புதிதாக திறக்கவுள்ள மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராடினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு எதிராக போலீசார் நடத்திய தடியடி பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்தப் போராட்டத்தின் பின்னர் நேற்று திடீரென மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. கடை திறக்கப்பட்ட செய்தி குடிமகன்களுக்கு தெரியாமல் போனதால் மதியம் வரை கூட்டம் கூடவில்லை. இதனால் குடிமகன்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதலில் வந்த குடிமகன்களுக்கு மது இலவசமாகக் கொடுக்கப்பட்டது. இந்த செய்தி அங்கு பரவவே அடுத்த சில மணி நேரங்களில் தெரியவரவே ஏராளமான குடிமகன்கள் வந்துகுவிந்தனர். கூட்டம் அதிகமானதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இலவசமாக மது கொடுத்து விட்டு பின்னர் நிறுத்திவிட்டனர். எனினும் மகிழ்ச்சியுடன் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று பணம் கொடுத்து மதுபானங்களை வாங்கினர். மதுக்கடைகள் திறந்த தகவல் மக்களுக்குக் கிடைத்ததும் அங்கு வந்த மக்கள் போராட்டம் நடத்தத்தொடங்கினர். போராட்டம் நடத்திய பெண்கள் இலவச குடி கிடைத்த மகிச்ச்சியில் குடிமகன்கள் திட்ட பெண்கள் முழு போதையில் இருந்த குடிமகன்களை அடிக்கப் போக குடிமகன்கள் எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் மக்களிடம் சுமூகமாக பேசி 2 நாட்களுக்குள் சரி செய்வதாக வாக்குக் கொடுத்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*