மாட்டிறைச்சிக்கு தடை : கேரளா எதிர்ப்பு

மாட்டிறைச்சி விற்பதற்கு நாடு முழுவதும் தடை என்று மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.. மேலும் மத்திய அரசின் இந்த விதிமுறையை ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் 1960-ஆம் ஆண்டு மிருகவதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி இனிமேல் மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் இந்த விதிமுறையை கேரள அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். கேரளாவில் மாட்டிறைச்சி என்பது அவர்கள் தினசரி உணவு வழக்கத்தோடு கலந்தததாகும். எனவே இத்திட்டத்துக்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் உணவு உரிமையில் பிறர் தலையிடுவதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதுகுறித்து கேரளாவின் உள்ளாட்சி மற்றும் சிறுபான்மை விவகார துறை அமைச்சர் கே.டி.ஜலீல் கூறுகையில் மத்திய அரசின் புதிய விதிமுறையை ஏற்க முடியாது என்றார். மேலும் வனத்துறை அமைச்சர் கே.ராஜு கூறுகையில், இந்த விதிமுறை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார். விவசாயத்துறை அமைச்சர் சுனில்குமார் கூறுகையில் மத்திய அரசின் உத்தரவு முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. இதை ஏற்கவே முடியாது என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*