கருணாநிதிக்கு கமல் புகழாரம்

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது ‘ எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன். கருணாநிதியின் வசனம் என்பது திரைத்துறையில் நுழைய அனுமதிச்சீட்டு போன்றது. நல்ல படங்கள் எடுத்த போதெல்லாம் அவரிடம் காண்பிக்கும் போது இருவரிடையே உறவு வலுத்தது. ’தசாவதாரம்’ படத்திற்காக கருணாநிதி கையால் கிள்ளுப்பட்ட கன்னம் எனது கன்னம். கருணாநிதி மூத்த அரசியல் தலைவர் மட்டுமல்ல தமிழறிஞர், சிறந்த வசனகர்த்தா. இதனை எம்.ஜி.ஆரும் பாராட்டியுள்ளார். கருணாநிதி உடனான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அரசியலையும் தாண்டி பல்வேறு துறைகளில் ஆர்வமுடையவர். வைரவிழா கொண்டாடுவதற்கு எவ்வளவு இளமையில் அரசியலுக்கு வந்திருக்கவேண்டும். அவரை வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை மனம் இருந்தால் போதும்’ என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*